Friday, 20 July 2012

புரட்சிகர தத்துவார்த்த பிடிப்பை உறுதிப்படுத்திய மூவர் வே.மீனாட்சி சுந்தரம்



தமிழ் மண்ணில் ஏற்கனவே சிங்கார வேலர் போன்ற முன்னோடிகளால் விதைக்கப்பட்ட மார்க்சிய சித்தாந்தம் ஆல் போல் தழைத்து அருகு போல் பரவ பாடுபட்டவர்களில் ஏ,நல்லசிவன்,பி.ராமசந்திரன்,பி.பரமேஸ்வரன் ஆகிய மூவரையும்  குறிப்பிடாமல் வரலாறு எழுதமுடியாது. இம்மூவரும் கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்தின் சிறப்பை உணர்ந்து, தலைமறைவு வாழ்வை ஏற்றவர்கள். காவல் துறையின் சித்தரவதைக்கு ஆளானவர்கள். அரசியலில் ஈடுபடுபவர்களையும் குற்றவாளிபோல் நடத்திய பிரிட்டீஷ்,காங்கிரஸ் ஆட்சிகள் இருந்த காலத்தில்   சிறைத் தண்டனையின் கொடுமைகளை அணுபவித்தவர்கள்.வெவ்வேறு கட்டத்தில்  கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் வந்திருந்தாலும் தமிழ் மண்ணில் மார்க்சிய சித்தாந்தத்தை விதைக்கிற கடமையை முதன்மைபடுத்தி பணியாற்றிவர்கள்.இம் மூவரும் களப்பணியை காட்டி சித்தாந்த துறையில் கவனம் செலுத்த தவறவில்லை, சித்தாந்த துறையை காட்டி களப்பணியை கைவிடவில்லை. புரட்சிகர தத்துவம் வழி காட்டாமல்,புரட்சிகர மாற்றம் ஏற்படாது என்பது கடந்தகால புரட்சியாளர்களின் அனுபவமட்டுமல்ல.இன்று மத்திய ஆசிய நாடுகளில் மக்களின் தன்னெழுச்சி பிரெஞ்சு புரட்சி போல் திசைமாறிப் போவதை காண்கிறோம்.இப்படி திசை மாறாமல் இலக்கை நோக்கி செல்ல வேண்டுமானால், மக்களைதிரட்டுங்கள்,அவர்கள் மனதில் விஞ்ஞான சோசலிச கருத்தை விதையுங்கள் என்று மார்க்ஸ் காட்டிய வழியை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
அந்த உண்மையை புரிந்த இந்த மூவரும் தமிழ் மண்ணில் சித்தாந்தப் போர் முனையில் நின்றனர்.பல வடிவங்களில் தலைதூக்கும் பூர்சுவா சித்தாந்தத்தின் பிடிப்பிலிருந்து உழைப்பாளி மக்களை மீட்க கிளர்ச்சிப் பிரச்சாரம் செய்தனர்.
அவர்கள் கட்சிக்குள் வந்த காலத்தில் சித்தாந்த குழப்பங்கள் மலிந்திருந்தின. சமூதாயப் புரட்சியின் தளபதி பாட்டாளி வர்க்கமே என்ற கருத்தை ஏற்க அறிவுலகம் தயங்கியது, பாட்டாளிவர்க்கத்திற்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்பதையும் அவ்வளவாக அன்று உணரப்படவில்லை. உயிர்த்தியாகம் செய்யவல்ல அல்லது நடாளுமன்றத்தில் வாதாடவல்ல புரட்சிக்கரர்கள் போதும் என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது,ஜனநாயக மத்தியத்துவ அடிப்படை கொண்ட கட்சியின் சிறப்பை மக்களும் உணர அணுபவங்கள் தேவைப்பட்டது. கட்சிக்குள்ளேயும், வெளியேயும் வெகுஜன புரட்சிகட்சியின் அவசியத்தை உணர்த்தும் சித்தாந்தப் போர் அவசியமானது. இந்த மூவரும் வெகுஜன புரட்சி  கட்சியின் அவசியத்தை உணர்ந்து உருவான மார்க்சிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 1940களில் காந்தி மீது மாளாத பற்றுக் கொண்ட நல்ல சிவன் என்ற இளைஞன் திசையன்விளை என்ற ஊரில்  கதர் கடையில் உதவி மேலாளராக இருந்தான்.100 ரூபாய் சம்பளம் (அன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூபாய் பன்னிரண்டு மட்டுமே இருந்தது என்றால் 100ரூபாயின் வாங்கும் சக்தியை அளந்து கொள்ளுங்கள்)  அன்று கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிசம் பேசும் குழுவாக இருந்தனர். தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இலக்கியங்களை ரகசியமாக சுற்றுக்குவிட்டு விஞ்ஞான சோசலிச கருத்தை விதைக்கும் பணிசெய்து வந்தனர்.வி.பி.சி போன்ற முன்னோடிகளின் தொடர்பால் மார்க்சிச சித்தாந்தத்தின் அடிப்படைகளை நல்லசிவன் அறிய நேர்ந்தது. ரகசியமாக மார்க்சிச நூல்களை படிக்கிறார் என்றவுடன் நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்தது.மார்க்சிச தத்துவ பிடிமானமே அவரை வேலையை இழந்தவுடன் கம்யூனிஸ்டாக்கியது. பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி பக்கம் நிற்கவைத்தது.
கட்சியின் அடிப்படைக் கொள்கை வழி நின்று எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விளக்கிச் சொல்லும் திறன் பெற்றவர் தோழர் ஏ.என். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக கட்சிக்குள் விவாதம் எழுந்தபோது மார்க்சிய  லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் கட்சி அணிகளுக்கு கட்சியின் நிலையினை விளக்கி அணிகளை ஒற்றுமைமைப்படுத்திய பணியினை நாம் மறக்க இயலாது. கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்ட காலத்தில் கூட்டு செயல்பாட்டின் அவசியத்தையும், அதன் வலிமையினையும் கட்சி செயல்பாட்டின் முக்கிய அம்சமாக முன்வைத்து பணியாற்றியதை நாம் இங்கே குறிப்பிட வேண்டும். கட்சியின் முடிவுகளை மேல்கமிட்டி முடிவு ஏற்றுக் கொள் என்று அதிகார தோரனையில் சொல்லாமல் சித்தாந்த அடிப்படையில் அவர் விளக்கும் விதம் கட்சிக்குள் கருத்தொற்றுமை செயலொற்றுமை இரண்டையும் உறுதிப்படுத்தியது.
விடுதலை போராட்ட காலத்திலே பி.ராமச்சந்திரன் மாணவனாக சென்னை வந்தவர் விடுதலை இயக்கத்தோடு மட்டுமல்ல, சென்னை நகர பாட்டாளி வர்க்க இயக்கத்தோடு இரண்டற கலந்தார். மார்க்சிசம் என்பது மேலோர்களின் கண்டுபிடிப்பல்ல பாட்டாளிவர்க்கத்தின் போராட்ட அணுபவத்தால் உருவான தத்துவம். புரிய இயலாத கருத்தல்ல.இதனை நன்கு உணர்ந்த பி.ஆர்.சி அதை எளிய முறையில் அணுபவங்களை இனைத்து கூறும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.அவரோடு பழகும் தொழிலாளர்கள்,மாணவர்கள், இளைஞர்கள் அவரை ஆசானாக கருதியதில் வியப்பில்லை.மார்க்சிஸ்ட் இதழுக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். கட்டுரைகள் அனைத்தும் கட்சியின் நடைமுறைகளை தீர்மாணிக்கும்  தத்துவ கண்ணோட்டத்தை எடுத்துக் கூறுவதாகவே இருக்கும். மார்க்சிஸ்ட் இதழின் துவக்க கால ஆசிரியர் பரமேஸ்வரன் சென்னை நகர அரசியல் மற்றும் தொழிற்சங்க,இயக்கத்தில் முத்திரை பதித்த கிளர்ச்சிக் காரர்களில் ஒருவர்.பரமேஸ்வரன் என்ற காசா தைக்கும் சிறுவன் விஞ்ஞான அடிப்படைகொண்ட தத்துவ இதழின் ஆசிரியாக உயர்ந்தது ஒரு அதிசயமே.இந்த அதிசயம் நிகழ வழிவகுத்தது சென்னை நகர தொழிற்சங்க இயக்கம் என்றால் மிகையாகாது. வர்க்கப் போரரட்டங்களில் ஆர்வத்தோடு பங்கெடுத்தால் அதுவே பல்கலைகழகமாக ஆகிவிடும் என்ற மார்க்சிய பொதுக் கருத்திற்கு சான்றாக பரமேஸ்வரன் வாழ்வு அமைந்துவிட்டது. வியட்நாமின் ஹோசிமின், ரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி மட்டுமல்ல எந்த நாட்டிலும் முதலாளித்துவ சமூகமாக மாறுகிற கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் மிகச் சிறந்த சமூக அக்கறையுள்ள மனிதர்களை உறுவாக்கிவிடும். அவர்களது வாழ்வும், தியாகமும் உத்வேகமூட்டிவிடும்.  சென்னை நகரத்தின் வர்க்கப் போராட்ட களத்திலே உருவான மிகச்சிறந்த அரசியல் மற்றும் சமூக சேவகனாக பரமேஸ்வரன் வாழ்ந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் வேர்கள் பரவ சிந்தனோடு பரமேஸ்வரன் அளித்த பங்கினை வரலாறு கூறிக்கொண்டே இருக்கும் .
இந்த மூவரின் வாழ்க்கையும் சமுதாய மாற்றத்தின் மீது அக்கறைகொண்ட அனைவருக்கும் எடுத்துக்காட்டாகும்.       

தேசிய இனப்பிரச்சினைக்கு மார்க்சியத் தீர்வு என்.குணசேகரன்


இன்று தமிழகத்தில் இலங்கைப் பிரச்னைக்கு ஈழம்தான் தீர்வு என பலர் பேசி வருகின்றனர். தமிழீழத்தை வலியுறுத்தி டெசோ மாநாடு கூட்டியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இந்தச் சூழலில் தேசிய இனப்பிரச்சனை குறித்த மார்க்சிய அணுகுமுறையை மீண்டும் மறுவாசிப்பு செய்து தெளிவுற வேண்டியுள்ளது.
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூவரும் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளனர். இன்றைய தேசிய இனப்பிரச்சினைகளை ஆராய, இந்த எழுத்துக்கள் உதவுகின்றன. ஆனால், அவை எழுதப்பட்ட காலச்சுழல் முக்கியமானது. பல நாடுகள் அடிமைப்பட்டு, காலனியாதிக்கத்துக்கு உட்பட்டுக் கிடந்த சூழலில் அந்த எழுத்துக்கள் எழுதப்பட்டன என்பதை மனதில் கொண்டு அவற்றை மறுவாசிப்பு செய்திட வேண்டும்.
இன்றைய தமிழக சூழலில் எழுகிற ஒரு கேள்வி இது: நாட்டை இன அடிப்படையில் இரு கூறுகளாக அல்லது பல கூறுகளாகப் பிரிப்பது, இனப் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்திடுமா? இந்தக் கேள்வியை விவாதிப்பதுடன், இனப் பிரச்சனைகளை அணுகுகிற போது, மார்க்சியம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையை இக்கட்டுரை விளக்க முயல்கிறது.

தேசிய இனம் பற்றிய பார்வை:
தற்போது முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் பாரதிய ஜனதாக் கட்சி இந்தியாவில் தேசிய இனங்களே இல்லை என்று ஒரேயடியாக மறுத்திடும் கட்சி. இந்தியா, ஒரே தேசம், ஒரே தேசிய இனம், ஒரே மதம் கொண்ட நாடு என்ற கருத்துடையவர்கள் அவர்கள். அவர்களது கருத்துப்படி பார்த்தால் தமிழினம் என்ற ஒன்று இல்லை என்ற அபத்தமான முடிவுக்கு வர வேண்டியிருக்கும். இந்த அபத்தங்களை எல்லாம் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பது தான் கம்யூனிஸ்டுகள் நிலை.
அப்படியானால் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை தேசிய இனம் என்று எதை வைத்து நிர்ணயிப்பது? சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஸ்டாலின் ஒரு வரையருப்பை வழங்கினார். தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பில், ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து, வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் தோழர் ஸ்டாலின். சில நாடுகள் இந்த வரையறைக்கு உட்படாது என்று விவாதிக்கப்பட்டாலும், இந்த வரையறையை பொதுவாக அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தோழர் ஸ்டாலினின் வரையறையின்படி, தமிழகத்தில் வாழும் மக்கள் ஒரு தனி தேசிய இனம். குறிப்பிட்ட நிலப்பரப்பு, பொது மொழி உள்ளிட்ட அனைத்தும் தமிழ் இனத்திற்கு உண்டு. கேரளம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தி வருகிறது. எனவே, பல்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.
தேசிய இனங்களிடம் தேசியம் என்ற கருத்து ஒரு உணர்வாக எழுகிறது. அதாவது, ஒரு தேசிய இனத்தவரிடம் நமது மக்கள் நம்மவர் என்ற மனப்பான்மை நிலைத்திருக்கிற நிலையே தேசியம் எனப்படுவது. இந்த தேசிய உணர்வை ஒன்று திரட்டி மாநில ஆட்சி அதிகாரத்தை திராவிட இயக்கம் தமிழகத்தில் கைப்பற்றியது. இதேபோன்று பல நாடுகளில் தேசிய உணர்வுகளைப் பயன்படுத்தி பல முதலாளித்துவ இயக்கங்கள் மக்கள் செல்வாக்கு பெற்றன. அதாவது, முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை வளர்ந்த நிகழ்வோடு இணைந்ததாக தேசிய இனங்களின் வளர்ச்சி அமைந்தது. ஆனால், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் தனித் தனி நாடுகளாக இன்றைய தமிழகம் பிரிந்திருந்த சூழலில் நமது மக்கள் நம்மவர் என்ற தேசிய மனப்பான்மை இருந்திருக்க வாய்ப்பில்லை. தேசம், தேசிய இனம், தேசியம் என்பதெல்லாம் பிற்காலத்தில் எழுந்த கருத்தாக்கங்கள். முதலாளித்துவ சகாப்தம் துவங்குவதற்கு முன்பு இப்போது தேசியம் என்று பேசப்படுகிற உணர்வு நிலை எழவில்லை. நிலபிரபுத்துவ சமூகத்தில் மக்கள் தங்களை தங்களது கிராமங்கள், பகுதிகள், பிரதேசங்களைச் சார்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர்.
முதலாளித்துவம் பெரும் பொருளாதார மாற்றத்தை நிகழ்த்தியது. ஒரு உள்நாட்டு சந்தையை உருவாக்கியதால் மக்கள் நாட்டு அரசுகளின் கீழ் உள்வாங்கப்பட்டு, தேசம் சார்ந்த குடிமகன்களாக மாறினர். இந்த வளர்ச்சிப் போக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக நடைபெற்றது. ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சி வேகமாக நடைபெற்ற போது நாட்டு அரசுகளின் உருவாக்கம் அதையொட்டி நிகழ்ந்தது. முதலாளித்துவமும், நிலப்பிரப்புத்துவமும் ஒருங்கே இயங்கி வந்த ஆசிய நாடுகளில் நாட்டு அரசுகளின் உருவாக்கம் வேறு விதமாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் இதையொட்டி தனி வரலாறு உண்டு. அது ஒரு தனி ஆய்வு.
எனினும் முதலாளித்துவ வளர்ச்சி தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கு வித்திட்டது என்பது பொதுவான உலக அனுபவம்.

முதலாளித்துவமும்,தேசியமும்:
முதலாளித்துவ இலாப வேட்டைக்கு விரிந்த பரந்த சந்தை தேவை. இந்த ஒருங்கிணைந்த சந்தை தேவைக்காக மக்களின் தேசிய இன உணர்வுகளை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்கிறது. ஜார் மன்னன் ஆட்சியின் போது ரஷியாவில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவம், நாடு தழுவிய சந்தை வேண்டும் என்பதற்காக, ரஷிய இன மேலாதிக்க வெறியை வளர்த்து, இதர தேசிய இனங்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்கும் சூழலை நிலைநிறுத்தியது. ரஷிய அல்லாத இதர இனங்களின் தேசிய எழுச்சியை அது அடக்குமுறை கொண்டு அடக்கி, ரஷியாவை பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக நீடிக்கச் செய்திட கடும் முயற்சி மேற்கொண்டது. பிறகு, கம்யூனிஸ்ட் ஆட்சி வந்த பின்புதான், தேசிய இனங்களுக்கு சமத்துவம் கிடைத்தது.
ஆனால், இந்தியாவில் வேறான நிலைமை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அன்று வளர்ந்து வந்த இந்திய தேசிய உணர்வுகள் வளர்ந்து வலுப்பெற்று, அது விடுதலை இயக்கமாக மலர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதிக்கத்தில் இருந்ததால் சந்தை, இலாப வாய்ப்புக்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு சாதமாக இருந்தது. இந்திய உள்நாட்டு முதலாளித்துவம் அவற்றை தனக்குரியதாக்கிக் கொள்ள முயற்சித்தது. இதன் காரணமாக உள்நாட்டு முதலாளித்துவம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்திற்கு முதலாளிகள் பக்கபலமாக இருந்தனர். இதே இந்தியப் பெரு முதலாளித்துவம் விடுதலைக்குப் பிறகு மொழி வழி மாநிலம் என்ற தேசிய இன எழுச்சி ஏற்பட்ட போது, தங்களது விரிந்து பரந்த, நாடு தழுவிய சுரண்டலுக்கும், சந்தை வாய்ப்புக்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தால் அந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கினர். மக்கள் போராட்டத்தால் அந்த கோரிக்கை வெற்றி பெற்று மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதாவது முதற் கட்டத்தில் இந்தியா என்ற தேசியம் உணர்வு சார்ந்த ஒற்றுமையை இந்திய முதலாளித்துவம் ஆதரித்தது. இரண்டாவது கட்டத்தில், மாநில அளவில் உருவான தேசியத்தை அது எதிர்த்தது.
எனவே, முதலாளித்துவம் தனது மூலதனக் குவியலை மையமாகக் கொண்டு தேசிய இன எழுச்சியை நிராகரிக்கிறது; அல்லது தேசிய இனங்களுக்கிடையே இன வெறியை கிளப்பி அதனைப் பயன்படுத்தி கொள்கிறது. உழைக்கும் மக்களிடம் தனது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள, முதலாளித்துவத்திற்குப் பயன்படும் முக்கியமான சித்தாந்தக் கருவி, தேசிய இனவெறி. இது, கடந்த பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வரும் வரலாறு. தேசிய உணர்வுகளை தனது ஆதாயத்திற்கு முதலாளித்துவம் பயன்படுத்தி இன மோதல்களையும், இன வன்முறையையும் தூண்டி வர்க்க ஒற்றுமையைக் குலைக்கிறது. இந்திய சூழலில் மாநில முதலாளிகளும், நிலப்பிரப்புக்களும் பிராந்திய உணர்வுகளை சுரண்டல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால் தான், கார்ல் மார்க்ஸ் எழுதினார்: "முதலாளித்துவத்தை வீழ்த்தி, பட்டாளி வர்க்கம் வெற்றி பெறுவது, ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைக்கான திறவுகோல்". (மார்க்ஸ்: போலந்து பற்றிய உரை). எனவே, உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தேசிய இனப்பிரச்னை தீர்வதற்கான வழியாக அமைந்துள்ளது.

சர்வதேசப் பார்வை:
பல தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அந்த இனங்களிடையே முழுச் சமத்துவம் இல்லாத நிலை இருந்தால் அந்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக தேசிய இனப் பிரச்னை உள்ளது. இந்தியா இதற்கோர் உதாரணம். இன்னமும் இந்தியாவில் சமத்துவம் எட்டப்படவில்லை. பழைய ரஷியா போன்று ஒரு இனமோ பல இனங்களோ விசேட சலுகைகள், உரிமைகள் கொண்டிருப்பதும், இதர இனம் அல்லது இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வரும் நிலையும் ஒரு நாட்டில் இருந்தால் அங்கு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக தேசிய இனப் பிரச்னை உள்ளது. இன்றைய இலங்கை இதற்கோர் உதாரணம்.
தேசிய இனப் பிரச்சினைக்கு இறுதி இலக்கு எது? எந்த தேசிய இனத்துக்கும் விசேட அந்தஸ்து, உரிமைகள் என்பது அகன்று, அனைத்து இனங்களும் சம உரிமை, சம அந்தஸ்து பெற்று வாழுகிற ஒரு சமுதாயம் அமைவதுதான் இறுதித் தீர்வு. இது பொருளாதாரச் சமத்துவத்திற்கான போராட்டத்தோடு இணைந்தது. அதாவது, சோஷலிசப் போரட்டத்தோடு இணைந்த போராட்டமாகத் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டம் அமைந்தால்தான் அது வெற்றி இலக்கை அடையும். இந்த இலக்கை அடைய உழைக்கும் வர்க்கங்கள் தேசியப் பிரச்சினை குறித்து கோரிக்கைகளை எழுப்பி, போராட  வேண்டும். பண்பாடு, மொழி, கலை உள்ளிட்ட அம்சங்கள் முற்போக்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்ட வேண்டும். அவ்வாறு போராடும் போது அந்தப் போராட்டப் பயணத்தில் பின்பற்ற வேண்டிய ஒரு அடிப்படைக் கோட்பாடு, சர்வதேசியம். ஒவ்வொரு கம்யூனிஸ்டும், சர்வதேசப் பார்வையுடன் தான் இப்பிரச்னையை அணுகிட வேண்டும். ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கங்கள் மொழியால், பண்பாட்டால் வேறுபட்டிருக்கலாம். ஆனால், முதலாளித்துவத்தால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் வர்க்கங்கள் எனும் வகையில் உலகத் தொழிலாளி வர்க்கங்கள் ஒரே தன்மை கொண்டவர்கள். சுரண்டலிலிருந்து விடுதலை என்ற பொது நோக்கம் கொண்டவர்கள். சுரண்டல் முற்றுப்பெற்ற சமூக அமைப்பான கம்யூனிசம் உலகந்தழுவிய அளவில் உருவாகும். இந்த அர்த்தத்தில் தான் மார்க்ஸ் பட்டாளிகளுக்கு நாடு இல்லை என்றார்.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதுகிற போது இந்திய நாட்டு மக்கள் ஆங்கிலேய அடிமைத்தன ஆட்சி எனும் நுகத்தடியை தூக்கி எரியும் போது, அது ஐரோப்பிய தொழிலாளி வர்க்க விடுதலைக்கும் வித்திடலாம் என்று எழுதினார். 1853-ம் ஆண்டிலேயே மார்க்சிற்கு இருந்த இந்த தீர்க்க தரிசனம் அதிசயதக்கது. இது உலகளாவிய உழைப்பாளி மக்களின் விடுதலை என்ற இலட்சியத்திலிருந்து வெளிப்பட்ட கருத்து.

பிரிவினையும், இனவெறியும்:
மார்க்சியம் தேசிய இனப்பிரச்னைக்கு ஒரே தீர்வாக பிரிவினையை முன்வைக்கிறது என்று பலர் கருதுகின்றனர். இது தவறானது. மார்க்சிய சித்தாந்தம், அடிப்படையில், சர்வதேசப் பார்வை கொண்டது. உலக உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக நிற்பது மார்க்சியம்.
பிரிவினை பேசும் பலர் தங்களது கருத்துக்கு லெனினை துணைக்கு அழைகின்றனர். ஆனால், லெனின் கூறுவது என்ன?
எந்த அளவு சாத்தியமோ அந்த அளவிற்கான மிகப்பெரிய நாட்டை உருவாக்கிட உழைப்பாளி வர்க்கக் கட்சி முயற்சிக்க வேண்டும். அதுதான் உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும். தேசங்களை மேலும் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முயல வேண்டும். ஆனால் வன்முறை பிரயோகித்து ஒன்றிணைக்கக் கூடாது. அனைத்து தேச உழைக்கும் மக்கள் விருப்பத்துடன் இணைந்த, சுதந்திர, சகோதரத்துவ ஒற்றுமையாக அது அமைய வேண்டும்.
எனவே, மார்க்சிய-லெனினியம் நாட்டைத் துண்டாடுவதை விரும்பவில்லை. குறிப்பிட்ட நிலைமைகளில் எழுப்பும் கோஷம் எதுவாக இருந்தாலும் இறுதியில் ஒன்றுபட்ட பெரியநாடு தான் இலட்சியமாக இருக்க வேண்டும் என மார்க்சியம் வலியுறுத்துகிறது.
பல சமயங்களில் பிரிவினைக் கோரிக்கைக்கு பின்னணியாக இருப்பது இன வெறி. ஒரு தேசிய இனம் சார்ந்த மக்களுக்கு எதிராக மற்ற இன மக்களை தூண்டிவிட, ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இனவெறி பயன்படுகிறது. தேசிய ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் உலகின் எந்த மூலையில் நிலவினாலும் அதனை உழைப்பாளி மக்கள் எதிர்க்க வேண்டும். உலக உழைக்கும் வர்க்கங்களோடு இணைந்து இந்த எதிர்ப்பினை வலுப்படுத்த வேண்டும். இனப்பிரச்சனையை அணுகுவதில் இந்த சர்வதேசப் பார்வை முக்கியமானது. இதுவே முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து தொழிலாளி வர்க்கக் கட்சிகளை வேறுபடுத்துகிற உரைகல்.
ரஷிய நிலைமைகளில் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வாக பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை தனது திட்டத்தில் முன்வைத்தார் லெனின். இது ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த ரஷிய அல்லாத தேசிய இனங்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியது. அவர்கள் போல்ஷிவிக் கட்சியின் மீதும், புரட்சியின் மீதும் நம்பிக்கை வைத்தனர். அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளி வர்க்க ஒற்றுமை மூலம் புரட்சி வெற்றி பெற்றது. எனவே, சுயநிர்ணய உரிமை என்பது நாட்டைத் துண்டாட எழுப்பப்பட்ட கோரிக்கை அல்ல.
இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்ட போது, இது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்ற விமர்சனம் எழுந்த போது, விவாகரத்து சட்ட உரிமையை உதாரணமாகக் காட்டி  லெனின் வாதிடுகிறார். விவாகரத்தை அனுமதிக்கும் சுதந்திரம், குடும்ப உறவுகளை அழிக்க ஊக்கமளிக்கும் என்று சொல்வது முட்டாள்தனமானது என்றார் லெனின். ஆக, லெனியத்தின் அடிப்படை, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம அந்தஸ்து, சம உரிமை என்பதுதான்.
ரஷியாவில் போல்ஷிவிக் கட்சியின் செயல் திட்டத்தை லெனின் உருவாக்கினார். அதில், எல்லா தேசங்களிலும், நிலவும் அனைத்து வகை தேசிய வெறிகளை எதிர்த்து வெற்றிகரமாக நடத்த வேண்டிய போராட்டத்தை அவர் வலியுறுத்துகிறார். அவரே இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.அவர் ரஷிய தேசிய இனத்தில் பிறந்தவர். ரஷிய இனம் சார்ந்தோரிடம் நிலவும் ரஷிய இனவெறியை கண்டிக்க அவர் எப்போதும் தயங்கியதில்லை. கட்சித் தோழர்களிடம் பூடகமாக இந்த உணர்வுகள் வெளிப்படும் போதேல்லாம் அதனை அம்பலப்படுத்தினார்.
ஒருமுறை மிகவும் வெறுப்புடன் குறிப்பிட்டார். கம்யூனிஸ்ட்களில் இரண்டு பேருக்கு ஒருவரை கீறிப் பாருங்கள்; அவரிடம் ஒரு மேலாதிக்க இனவெறியை நீங்கள் காண்பீர்கள்; அந்த வெறியன் நமக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான். அவனை எதிர்த்து வீழ்த்த வேண்டும். தனது இறுதிக் காலம் வரை இந்த போராட்டத்தை அவர் நடத்தினார். இனவெறி அடிப்படையில் தேசிய இனப்பிரச்னைகளை அணுகுவது மார்க்சிய அணுகுமுறை அல்ல. அது உழைப்பாளி மக்களிடம் வர்க்க உணர்வை மழுங்கடித்து இன அடையாளத்தை வலுப்படுத்தும். இதன் மூலம் முதலாளித்துவ சித்தாந்த மேலாதிக்கத்திலிருந்து உழைப்பாளி மக்களை விடுவிக்க இயலாத நிலை ஏற்படும்.

இந்தியாவில் தேசிய இனப்பிரச்னை:
இந்திய தேசிய இனப்பிரச்னையை எவ்வாறு அணுக வேண்டும் என்று மார்க்சிய மேதை தோழர் பி.டி.ரணடிவே கீழ்க் கண்டவாறு எழுதினார்.
1. தேசிய இனப்பிரச்சனையை தனித்துப் பார்ப்பது, சரியானது அல்ல. மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதின் பிரிக்க முடியாத பகுதி அது. தேசிய இன உரிமைகளுக்கான போராட்டம் பொதுவான புரட்சிகரப் போராட்டத்துடன் இணைந்தது.....
2. ....தேசிய சமத்துவத்திற்கான போராட்டத்தை நடத்துகிற போது, எந்த முனையிலிருந்து தேசிய வெறி எழுந்தாலும், அதனை எதிர்த்து உறுதிமிக்க, ஊசலாட்டமில்லாத நிலை எடுக்க வேண்டும்.
        3.     .....இதில் நாட்டின் தொழிலாளி வர்க்கம் ஒரு தீர்மானகரமான பங்கினை வகிக்க வேண்டும். அது தனது வர்க்கக் கண்ணோட்டத்தை உறுதியாக பற்றி நிற்க வேண்டும். தேசிய வெறித்தனங்களுக்கு இரையாகாமல், தேசிய இனங்களின் சமத்துவம், தேச ஒற்றுமைக்காக முன்முயற்சி எடுக்க வேண்டும்.
இந்த  மூன்றும் இந்தியாவில் செயல்படும் கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகளாகத் திகழ்கின்றன. இந்திய நிலைமை ரஷிய நிலைமைகளிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறானது. இங்கே குறிப்பிட்ட  ஒரு இனம், ஆதிக்கம் செலுத்தவில்லை. லெனினும் கூட, ரஷியாவில் நிலவும் வரலாற்று ரீதியான, விசேடமான, குறிப்பிட்ட சூழலில் உள்ள பிரச்னையாக ரஷிய தேசிய இனப்பிரச்னை இருக்கிறது என்று அழுத்தமாக எழுதினார். அவர் உருவாக்கிய தீர்வுகளை அப்படியே இந்தியாவில் காப்பி அடிப்பது மார்க்சியம் ஆகாது. எனவே இந்திய நிலைமைகளை ஆராய்ந்த மார்க்சிஸ்ட் கட்சி சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கை இந்திய நிலைமைகளுக்குப் பொருந்தாது எனற முடிவுக்கு வந்தது.
அதற்குரிய காரணங்களை 1972-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஏழாவது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு குறிப்பு என்ற ஆவணம் விளக்கியுள்ளது.
பிரிந்துபோகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை அப்படியே இங்கு மீண்டும் எழுப்புவது, குறுகிய தேசிய வெறியையும், பிராந்திய வெறியையும் கிளப்புபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். அத்துடன், அது, இந்திய ஒற்று மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அடிப்படையில் இந்திய தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டவும், அரசியல் ரீதியாக அவர்களை பயிற்றுவிக்கவும் உதவிடாது.
இந்திய நிலைமைகளில் பெரு முதலாளிகள், மற்றும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகள் எழுப்பும் தேசிய வெறியை எதிர்த்த போராட்டம் முக்கியமானதாகும். இந்திய தேசியம் எனும் வகையில் மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட அதிகார மேலாதிக்கத்திற்காக பெரு முதலாளிகளின் குரலாக செயல்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் தேசிய வெறியை எதிர்க்க வேண்டும். அந்தக் கட்சிகளின் தேசியம் இந்நாட்டின் பல தேசிய இனங்களின் இருப்பையே அங்கீகரிக்கவில்லை.
பா.ஜ.க.வின் இந்து தேசியம் எனும் கருத்து மதம் சார்ந்து தேசிய இனத்தை வரையறுக்கிறது. இதனால் தனித்தனி தேசிய பண்பாடுகளை அது நிராகரிக்கிறது. அத்துடன்,  சிறுபான்மையினரின் பண்பாட்டையும் நிராகரிக்கிறது. பல தேசிய இனங்களையே மத அடிப்படையில் பிளவுபடுத்தும் தன்மை கொண்டது. அனைத்து மதங்களை சார்ந்தவர்களுக்கும், அவரவர் சமூக வாழ்க்கை முறைகளை, நாட்டின் ஜனநாயக அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு, பின்பற்றும் உரிமை உண்டு. ஆனால், பாஜக இந்த உரிமையை மறுக்கிறது. எனவே, சங் பரிவாரத்தின் தேசியம் பற்றிய பார்வை ஒற்றுமைக்கும், தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைக்கும் எதிரானது. மறுபுறம், இந்தியப் பொருளாதார தளத்தில்,பெரு முதலாளிகளுக்குப் போட்டியாக, தங்களை வலுப்படுத்திக் கொள்ள பிராந்திய முதலாளித்துவம் முயற்சிக்கிறது. இதற்கு அவ்வபோது தேசிய வெறியை பயன்படுத்திக் கொள்ளுகிறது. உதாரணமாக, தமிழகத்தில் திமுக துவக்கத்தில் திராவிட நாடு என்ற பிரிவினை கோஷத்தை எழுப்பியது.பிறகு,பிராந்திய முதலாளித்துவம், பெரு முதலாளித்துவ தலைமையின் கீழ், வளர்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்ட சூழலில் பிரிவினை கோரிக்கை கைவிடப்பட்டது. மாநில சுயாட்சி என்ற ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், இதில் கூட, ஒரு பலவீனமான மத்திய அரசு இருக்க வேண்டும் என்ற வகையில் கோரிக்கைகள் எழுப்பபடுவதுண்டு. இது, பிராந்திய முதலாளித்துவம் விரும்புகிற  பலவீனமான மத்திய அரசு; பலமான மாநில அரசு என்ற ஏற்பாடு ஆகும். மத்திய, மாநில உறவுகள் பற்றி தொடர்ந்து எழுதி வரும் பழ.நெடுமாறன் இந்தத் தொனியில்தான் எழுதி வருகின்றார். ஆனால், இது இடதுசாரிகள் அமைக்க விழைகின்ற பலமான மத்திய அரசு, பலமான மாநில அரசுகள் என்ற உண்மையான ஜனநாயக கோட்பாட்டிற்கு எதிரானது. எனினும் மாநிலக் கட்சிகள் எழுப்பும் மாநில சுயாட்சிக் கோரிக்கை வரவேற்க வேண்டிய நிலைப்பாடு. ஆனால் அதனை அக்கட்சிகள்  உறுதியாக தொடர்ந்து எழுப்புவதில்லை.
தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அவ்வபோது மாநில சுயாட்சிக் கோரிக்கையை எழுப்பினாலும் மக்களைத் திரட்டிப் போராட முன்வருவதில்லை. ஏனெனில், மக்களுக்கான அதிகாரம் என்ற வகையில் மாநில சுயாட்சிக் கோரிக்கையை அவர்கள் எழுப்புவதில்லை. உண்மையில், மாநில முதலாளித்துவக் கட்சிகள் தமிழகத்தில் மக்கள் ஆதரவை பெற்றிட மொழி, இன சமத்துவப் பிரச்னைகளை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அவை இன்னும் தீர்க்கப்படவில்லை. உழைக்கும் மக்கள் இயக்கங்கள் அவற்றை எழுப்பிட வேண்டும். மாநில சுயாட்சிக்காக உழைக்கும் மக்கள் குரலெழுப்ப வேண்டும். அத்துடன் கீழ்மட்ட  உள்ளாட்சி அமைப்புக்கள் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டால் தான் தமிழினக் குடிமக்கள் ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவர்களாக வாழ முடியும். பல தேசிய இன மக்கள் உழைக்கும் வர்க்கம் என்ற வகையில் நாடு தழுவிய அளவில் மொழி, பண்பாட்டு, இன உரிமைகளுக்காக திரளும் போது இனச் சமத்துவம் சாத்தியமாகும்.
எனவே, தற்போதைய நிலையில் இந்திய தேசிய இனப்பிரச்னை மூன்று குறிக்கோள்கள் கொண்டது.
1) அனைத்து மொழிகளுக்கான சமத்துவம்
        2) மத்திய மாநில உறவுகள் சீரமைத்தல்
        3)  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல பகுதிகளுக்கிடையே உள்ள சமச்சீரற்ற நிலை மாறி சமமான வளர்ச்சி. இவை 65 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நீடிக்கின்றன.
இந்த மூன்று அம்சங்களை மையமாக வைத்து பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கம் வளர்க்கப்பட வேண்டும்.
மூன்றாவது அம்சமாக சொல்லப்பட்ட சமச்சீரற்ற வளர்ச்சி, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை ஏற்படுத்திய விளைவு, இந்திய ஆளும் வர்க்கக் கொள்கைகளை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம், தேசிய இனப் பிரச்சனைக்கான ஜனநாயகத் தீர்வாக அமையும்

இலங்கை இனப்பிரச்னை:
இந்தியாவில் நிலவும் உள்நாட்டு தேசிய இனப் பிரச்னைகளில் கடைபிடிக்கப்படும் அதே அணுகுமுறையைத் தான் இந்திய முதலாளித்துவக் கட்சிகள் இலங்கை இனப் பிரச்னையிலும் கடைபிடிக்கின்றன. காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் இலங்கையை ஆளும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளோடு வர்க்கப் பாசம் கொண்டுள்ளன. இதனால் இனப் பிரச்னையில் உரிய தீர்வுகளை எட்ட அக்கறை காட்டுவதில்லை.
அதே போன்று, மாநில முதலாளித்துவக் கட்சிகளால் இலங்கை இனப்பிரச்னைக்கான உரிய தீர்வுகளை சொல்ல இயலாது. அப்பிரச்சனையை வைத்து, இங்குள்ள மக்களின் இனப்பற்றை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற தமிழர் உரிமைப் போரட்டத்தின் துவக்க நாட்களில் தனி ஈழக் கோரிக்கை எழுப்பப்படவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு முயற்சிக்கப்பட்டது. ஆனால், ஆட்சியில் இருந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் தமிழர் கோரிக்கைகளை மறுத்து வந்துள்ளனர். சிங்கள இனவெறியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திவந்தனர். தமிழர் மீதான இனவொடுக்கு முறையை தங்களது வர்க்க அதிகாரம் நீடிக்க பயன்படுத்தி வந்தனர். இதனால் பல தமிழர் இயக்கங்கள் தனித்  தமிழ் ஈழத்தை கொள்கையாகக் கொண்டிருந்தனர்.
ஆனால் இன்றைய நிலையில் தமிழர் தேசிய கூட்டமைப்பினர் மிதவாதப் போக்கைக் கையாண்டு இலங்கை அரசியல் அமைப்புச் சட்ட வரம்பிற்குள் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண முயன்று வருகின்றனர். மார்க்சிய அடிப்படையில் மட்டுமல்லாது, நடைமுறை அரசியல் தேவை அடிப்படையிலும் பிரிவினை கோரிக்கை பொருத்தமானது அல்ல. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரங்கள், சுயாட்சி கொண்ட தமிழர் மாகாணங்கள் அமைப்பது என்பதே சரியான தீர்வாக அமையும். இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் மிர்ரர் பத்திரிகையில் மே-13 அன்று வெளியான ஒரே குரலில் தமிழர் நிலைப்பாடு முன் வைக்கப்படாததையே அரசாங்கங்கள் விரும்புகின்றன என்ற கட்டுரையில் கீழ்கண்டக் கருத்தை கட்டுரையாசிரியர் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.
......தனி நாட்டுக் கோரிக்கையோ, முஸ்லீம்களை புறக்கணிக்கும் தீர்வோ ஒருபோதும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்காது.  தனி நாட்டுக் கோரிக்கை தலை தூக்கும் போது சிங்களவர்கள் மத்தியில் வாழும் முற்போக்கு கருத்துள்ளவர்களும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
தமிழர் ஐக்கியம் என்று வரும் போது அது தமிழ் நாட்டு மக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் கருத்துக்களையும் உள்ளடக்கும். தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தனி நாடு கேட்கும் போது ஆட்சியாளர்களும், சிங்கள மக்களும் உள்நாட்டு தமிழர்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நியாயம் இல்லாவிட்டாலும் சகஜம். அது நல்லிணக்கத்திற்கு சாதகமான நிலைமை அல்ல.
இந்தக் குரலுக்கு, தமிழ்நாட்டில் வாழ்கின்ற, உண்மையாகவே இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வு காண விழைகின்ற அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். இலங்கை பிரச்னையை மையமாக வைத்து தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது.இந்த முயற்சிகளால் இனவெறி உணர்வுகள் வலுப்பெற்று வர்க்க உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் என்ற ஆபத்தை உணர்ந்து இடதுசாரி இயக்கங்கள் செயல்பட வேண்டும்.

ஏகாதிபத்தியத்தின் பங்கு:
தேசிய இனப்பிரச்சனைகளை ஏகாதிபத்தியம் எவ்வாறு கையாள்கிறது என்பதை நினைத்துப் பார்ப்பது அவசியம். 1950களில் 60களில் காலனீய ஆதிக்கம் உலகளவில் தகர்க்கப்படும் காலத்திற்கு முன்பு, தேசீய இனப்போராட்டங்களுக்கு, அவை பெரும்பாலும் காலனிய எதிர்ப்பு இயக்கங்களாகவும் அமைந்த நிலையில், ஒரு வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் இருந்தது. ஆனால, அதற்குப்பின் வளரும் நாடுகளுக்கு எதிரான வகையில் ஏகாதிபத்தியம் பல தேசிய இன எழுச்சிகளை தூண்டி விட்டது. வளரும் நாடுகளில் சிலவற்றை பலவீனப்படுத்தும் நோக்குடன் இந்த நாடுகளில் பிரிவினை வாத இயக்கங்களை ஆதரித்தது. அவற்றிற்கு பண மற்றும் ஆயுத உதவி அளித்தது. இந்தப் பின்னணியில், பல தேசிய இன உணர்வு அடிப்படையிலான இயக்கங்கள் முற்போக்கு உள்ளடக்கத்தை இழந்து, ஏகாதிபத்திய நலன்களுக்கு சாதகமாக செயல்படும் நிலை ஏற்பட்டது. ஆப்பிரிக்காவில், காலனி ஆதிக்கத்தை எதிர்த்த தேசிய இன போராட்டங்களை உடைக்க குழு-இன பிரிவினை வாதங்கள் கிளப்பி விடப்பட்டன. சோவியத் யூனியனுக்கும், சோசலிசத்திற்கும் எதிராகவும், இச்செயல்பாடுகள் ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இந்திய நாட்டில் வடகிழக்கு மாநிலங்களிலும், சீனாவில் திபெத் பகுதியில் பிரிவினைவாத சக்திகளை கிளப்பி விடுவதிலும் ஏகாதிபத்தியத்தின் பங்கு உள்ளது என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். எழுபது ஆண்டுகள் ஒன்றுபட்ட நாடாக இருந்த யூகோஸ்லேவியா நாடு, குரோஷியா, ஸ்லோவினியா, போஸ்னியா என துண்டு துண்டான நாடுகளாக பெரும் இரத்தக் களறிக்கு இடையில் பிரிந்தன. இன மோதல்களில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானர்கள். கொடூரமாக மககள் தங்களிடயே போரிட்டு சாகும் நிலையை ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக ஊக்குவித்தனர். இனவெறியும், ஏகாதிபத்திய தூண்டுதலும் சேர்ந்தால், பேரழிவு ஏற்படும் என்பதற்கு ஒரு உதாரணம் யூகோஸ்லேவியா. அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கு தனது அரசியல், பொருளாதார, ராணுவ மேலாதிக்கத்தை நாட்டுப்பிரிவினை மூலம் வலுவாக உறுதிபடுத்திக் கொண்டது.  இதேநிலையை தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். சீனாவை மட்டுப்படுத்த இந்தியாவை பகடைககாயாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல தந்திரங்களை கையாள்கின்றனர். இலங்கை நாடு அமைந்துள்ள பகுதி, ஒரு முக்கியமான, கேந்திரமான பகுதி. இலங்கையில் இனக்குழப்பம், மோதல்கள் நீடிப்பது, அவர்களுக்கு சாதகமாக உள்ளது. இலங்கையும், யுகோஸ்லேவியா போன்று உடைவது மேலும் அவர்களுடைய மேலாதிக்கத்திறகு உதவிடும். எனவே, தனிஈழம் என்ற கோரிக்கை ஏகாதிபத்திய நலன்களுக்கே உதவும். எனவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வை எட்டுவதுதான் சரியான அணுகுமுறையாக அமைந்திடும். லெனின் அறிவுரை
தேசிய இனப்பிரச்னைகளுக்கு தீர்வு காண மார்க்சிய லெனினியம் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது. இது லெனின் முன்வைத்த அறிவுரை:
முதலாளித்துவம் எப்போதும் தேசிய இனக் கோரிக்கைளை முன்னிறுத்தும். ஆனால், பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போரட்டத்துக்குட்பட்டு இந்த கோரிக்கைகளை எழுப்பும். தேசிய இனங்களுக்கு சமத்துவம், சம உரிமையை வலியுறுத்துகிற அதே நேரத்தில், பாட்டாளி வர்க்கக் கூட்டணியை முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்தும். ஒவ்வொரு தேசிய இன கோரிக்கையையும் தொழிலாளி வர்க்கப் போராட்ட கோணத்திலேயே அணுகிடும். கம்யூனிஸ்டுகள் எந்தச் சூழலிலும் இந்த அறிவுரையை மறந்திடக்கூடாது. மேற்கண்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தொடர்ச்சியாக தேசிய இனக் கோரிக்கைகளை எழுப்ப வேண்டும். இனம் சார்ந்த கலை, இலக்கியம், இசை, மொழி, பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் முற்போக்கான கோரிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் அந்தக் கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டிட வேண்டும். இதில் கம்யூனிஸ்டுகள் முன்முயற்சி எடுக்காத போது முதலாளித்துவம் இனக் கோரிக்கைளை முன்னிறுத்தி மக்களை தனது வசம் கைப்பற்றி கொள்ளும் என்ற வரலாற்று அனுபவத்தையும் மறந்திடக் கூடாது
=================================================================
உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள்:
1.1.Karl Marx,Frederick Engels:”On the national and colonial questions”.Left word
2.லெனின் தேர்வு நூல்கள்.

3.B.T.Ranadive:”Marxism and nationality question in India”The Marxist,1983.
4.TamilMirror
http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/40961-2012-05-13-18-23-27.html

பாபாசாகேப் அம்பேத்கரும் - புதிய தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களும் ஆனந்த் டெல்டும்டே




(டாக்டர் அம்பேத்கர் சுதந்திரச்சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் வர்க்கப் போராட்டத்தை நம்பவில்லை என்றும், எனவே தலித் மக்கள் சமூகப் பொருளாதார விஷயங்களில் பொதுப் போராட்டங்களிலிருந்து விலகி நிற்க வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இந்த இரண்டு கூற்றுக்களும் தவறானவை. இந்தக் கட்டுரையில் டாக்டர் ஆனந்த் டெல்டும்டே இந்த இரண்டு வாதங்களையும் உடைத்தெறிகிறார். சமத்துவத்தை முன்வைக்கும் அனைத்துத் தத்துவங்கள் மீதும் புதிய தாராளமயக் கோட்பாடு தாக்குதல் தொடுத்துவரும் வேளையில் இந்தக் கட்டுரை மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவ தாகும். 
டாக்டர் ஆனந்த் டெல்டும்டே புகழ்பெற்ற  தலித் அறிஞர்,கரக்பூர் ஐடிஐயில் பேராசிரியர். தலித் பிரச்சனைகள் குறித்தும் பல புத்தகங்கள் எழுதியவர்.)
ஜூலை 1991ல் நரசிம்மராவ் அரசு ஐ.எம்.எப்., உலக வங்கியின் கட்டளைப்படி புதிய தாராளமயக் கொள்கையை அமல்படுத்திய போது அவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பொருளாதாரத் திசைவழி என தவறான சித்தரிப்பை மக்களுக்குக் கூறினார்கள். அதே சமயம் தாட்சரின் வழியில் வேறு வழியே இல்லை என்றும் சால்ஜாப்பு கூறினார்கள். பல அறிவுஜீவிகள் பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டார்களோ, இல்லையோ அரசாங்கத்திடம் நற்பெயரைப் பெறுவதற்காகப் போட்டிபோட்டுக் கொண்டு அதை ஆதரித்தனர். பொருளாதாரம் என்பது தலித் அறிவுலகத்திலிருந்து பெருமளவில் விலக்கி வைக்கப்பட்டது. ஏனென்றால் அது சுயநல சக்திகள் பிரச்சாரம் செய்த இரண்டு வினோதமான காரணங்களைக் கொண்டு கம்யூனிஸ்டுகளுடன் (பொருளாதாரவாதம்) அடையாளம் காணப்பட்டது. ஒன்று கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள், பொருளாதாரம் என்பது பொருளுடன் தொடர்புடையது, எனவே அது கம்யூனிசத்தனமானது. இரண்டாவது, அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர்.தலித்துகள் அம்பேத்கரின் வழிநடப்பவர்கள். எனவே தலித்துகள் பொருளாதாரத்திலிருந்து விலகி நிற்கவேண்டும் (இதில் எந்த வாசகமும் சரியானதல்ல. ஆனால் அவை தானாகவே நிலை நிறுத்திக்கொண்ட உண்மைகளாக வலியுறுத்தப்படுகின்றன). எங்களது போராட்டம் ரொட்டிக்காக (மட்டுமே) அல்ல அது மரியாதைக்காக என்று அவர்கள் பெருமையுடன் கூறினார்கள்.
இதன் விளைவாக தலித்துக்களிடயே அனைவரையும் ஈர்க்கக் கூடிய வகையில் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய விவாதங்கள் இருந்ததில்லை. இருப்பினும் புகழார்வம் கொண்ட சிலர் இந்த மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு ஆதரவாக உரத்தக் குரலில் பேச தலைப்பட்டனர். எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கெல்லாம் அரசு தகுந்த முறையில் பரிசளித்தது. நான் அவற்றையெல்லாம் சந்தர்ப்பவாதச் செயல்பாடுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னர் இப்போக்கு தலித் முதலாளித்துவத்திற்கான பிரச்சாரம் அல்லது தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அல்லது அம்பேத்கரை ஒரு சுதந்திரச் சந்தைப் பொருளாதாரவாதியாக சித்தரிப்பதென்ற அளவிற்கு தீவிரமடைந்தது. புதிய
தாராளவாத வைரசின் மூலதார நிறுவனமான மிஸஸ் (Misses) நிறுவனம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இத்தகைய உருவகப்படுத்தல் அரங்கேற்றப்பட்டது.
அண்மையில் டாக்டர் அம்பேத்கரின் அறிவு ஆழம்மிகுந்த அம்சத்தை கண்டு பிடித்திருப்பதாக பாசாங்கு புரியும் ஒரு `அறிவாளி' "அம்பேத்கார்- மறக்கப்பட்ட சு‍தந்திரச்சந்தை பொருளாதாரவாதி" என்று தலைப்பிட்ட கட்டுரை ஒன்றினை Ludwigvon Misses Institute- ல் சமர்ப்பித்தார். துரதிருஷ்டவசமாக, அம்பேத்கரின் மீது தங்கள் பக்தியினை வெளிப்படுத்தும் தலித்துகள் - எந்த நேரத்திலும் அவரை "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்" என்றுதான் குறிப்பிட வேண்டும். என்று கூறுபவர்கள் - ஒரு விஷயத்தை புரிந்து கொளளவில்லை; அம்பேத்கரை சுதந்திரச்சந்தை பொருளாதாரவாதி என்று குறிப்படுவதைக் காட்டிலும் அவர் மீது வீசப்படும் மிகவும் மோசமான அவதூறு எதுவும் இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அந்த அவதூறையும் தாண்டி, அது அவரின் குணத்திற்கே களங்கம் விளைவிக்கும் முயற்சியுமாகும். அம்பேத்கர் குறித்து ஏராளமாக எழுதப்பட்டுள்ளபோதும் அவர் எதற்காகப் போராடினார் என்பதையே தலித்துகள் புரிந்து கொள்ள வில்லை என்பது வருத்தத்துக்குரியது. இந்தத் தற்காலப் பின்னணியில் தற்போதைய புதிய தாராளவாத கொள்கையுடன் அம்பேத்கரின் சிந்தனைகளின் முக்கியமான அம்சங்களைப் பொருத்திப்பார்க்க இந்தக் கட்டுரை முயற்சிக்கிறது. 

சுதந்திரச் சந்தையைப் புரிந்துகொள்ளுதல்:
சந்தை என்றால் பரிமாற்ற ஊடகமான பணத்தின் உதவியுடன் பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும் இடம். சந்தையானது வாடிக்கையாளரின் வாங்கும் சக்திக்கேற்ப அவரை உயர்த்துகிறது, அதாவது அவர் எந்த அளவுக்கு பணம் வைத்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரை அது உயர்த்துகிறது. சந்தைகள் மக்களது தேவைகளை ஈடுசெய்வதற்காகப் பொருட்களையும் சேவைகளையும் அவர்களிடையே பரிமாறிக் கொள்வதற்கு வசதி செய்து கொடுக்கும் கருவியாக பண்டைய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. ஏனென்றால் வாழ்க்கைக்கான அனைத்துத் தேவைகளையும் ஒரு மனிதனோ அல்லது ஒரு குடும்பமோ தயார் செய்துவிட முடியாது. கிராமத்தினர் காய்கறிகளை விளைவித்தனர். ஆனால் அவற்றை சமைப்பதற்கான எண்ணெயோ, உப்போ அவர்களிடம் கிடையாது. எனவே அவர்கள் தம்மிடம் உள்ள அதிகப்படியான காய்கறிகளை பரிமாறிக்கொண்டு உப்பையும் எண்ணெயையும் பெறுவதற்காக கிராமச் சந்தைக்குச் சென்றனர். முதலில் அவர்கள் பண்டமாற்றம் செய்து கொண்டனர். பின்னர் பணம் அதற்கான ஊடகமாக மாறியது. பணம் கண்டுபிடிக்கப்பட்டதானது பரிமாற்றத்துக்கு வசதியேற்படுத்தியது மட்டுமல்ல, குவித்து வைப்பதற்கும் வசதி ஏற்படுத்தியது. யாராலும் தானியங்களையோ, உப்பையோ குவித்து வைக்க முடியாது. ஏனெனில் அதற்கு அவர்களுக்கு இடம் தேவைப்பட்டது. மேலும் அவை காலப் போக்கில் சேதமடைந்து அழிந்தும் போகின்றன. ஆனால் பணத்தை வரைமுறையின்றி சேமிக்க முடியும். அது குறைந்துபோவதற்கு பதிலாக அதிகரிக்கிறது. மிகவும் ஆபத்தான வகையில் அது சுதந்திரச் சந்தைக்கு வழியேற்படுத்தியது மட்டுமின்றி, மக்களின் வாங்கும் சக்தியும் சுதந்திரமாகச் செயல்பட வழியேற்படுத்தியது.
சந்தையில் வாங்குபவரும், விற்பவரும் சமமானவர்கள் என சுதந்திரச் சந்தை அடிப்படையில் கருதிக் கொள்கிறது. அவர்களிடம் சமமான அளவு தகவல்கள் இருப்பதாகவும், அதனால் அவர்களுக்கிடையேயான பரிமாற்றம், பரிமாற்றிக் கொள்ளப்படக் கூடிய பொருளுடைய மதிப்பின் அடிப்படையிலேயே நடக்கிறது என்றும் அது கருதுகிறது. ஆனால் சுதந்திரச் சந்தையின் அம்சங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக வாதிடப்படும் இந்தக் கருத்துகோள் நிதர்சன உலகில் பிரச்சனைக்குரியதாகிறது. (சிலரை தனது தேவைக்கு‍ அதிகமாக குவிப்பதற்கு அனுமதித்து அதன் மூலம் மற்றவர்கள் மீது பணம் மற்றும் தகவல்கள் ஆகிய இரண்டிலும் அதிகாரம் செலுத்த சுதந்திரச் சந்தை வகை செய்கிறது). சந்தையில் நிலவும் இந்த அசமத்துவம் காரணமாக சுதந்திரச் சந்தை சுரண்டலுக்கான கருவியாகிவிடுகிறது. ஒரு வணிகர் அல்லது சில வணிகர்கள் ஒன்றிணைத்து பொருட்கள் அல்லது சேவைகளுக்கு விலையை நிர்ணயிப்பது பொதுவாக ஏகபோகம் எனப்படுகிறது. நமது தேவை மற்றும் வினியோகத்தை விலைக் கட்டுப்பாடு மூலம் சமன்படுத்துவதற்கு. வளங்களைப் பங்கீடு செய்வதற்கான சிறந்த திறனுள்ள கருவியாக சந்தைகளை சுதந்திரச் சந்தையாளர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் தேவை, வினியோகம் இரண்டையுமே வலிமையானவர்கள் வசதிக்கேற்ப வளைக்கிறார்கள். இந்த முழு அமைப்பையும் வளங்களை ஒதுக்கீடு செய்வதற்காக அல்லாமல், குவிப்பதற்கான வழிமுறையாக உபயோகித்துக் கொள்கிறார்கள். சந்தையின் தோல்வி என்று பொருளாதாரத்தில் அறியப்படும் பல நிகழ்ச்சிகள் உண்டு என்பதே உண்மை. தனிநபர்களின் சுயநலத்துடனான தேடல்கள் திறனற்ற முடிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடக் கூடியவை என அவை புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இப்பார்வையை சமூக நோக்கின் மூலம் மேம்படுத்திவிட முடியும். சுதந்திரச் சந்தையை எளிதாகப் பொருட்களை பரிமாற்றம் செடீநுது கொள்ளும் வழிமுறையாக சந்தைக் கோட்பாட்டை நீட்டிப்பவர்களுக்கும் அது ஒரு தத்துவார்த்த மிகை எண்ணமாக இருக்கலாம். அவர்கள் ஒன்று கோட்பாட்டுத் தவறைச் செய்கிறார்கள் இல்லை வேண்டு மென்றே தவறு இழைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

"பணத்தின் (ரூபாயின்) பிரச்சனையை" தவறாகப் பார்த்தல்: 
அம்பேத்கரை பணக்கோட்பாட்டாளரென்றோ, சுதந்திரச் சந்தையாளரென்றோ, புதிய தாராளவாதப் பொருளாதாரவாதி என்றோ தவறாகக் குணாம்சப் படுத்துவதற்கான ஒரே மூலாதாரம் அவரது பட்டயப்படிப்புக்கு அவர்
எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருளான `பணத்தின் (ரூபாயின்) பிரச்சனையை தவறாகவோ வேண்டுமென்றோ சாட்சியமாக்குவது என்று கூறலாம். அதில் அம்பேத்கர் தற்போது பணம் மதிப்பிடப்படும் முறையை கேள்விக் குள்ளாக்கித் தனது ஆய்வை முன்வைக்கிறார். அதாவது தங்க அளவுகோலுக்கு எதிராக தங்கப் பரிமாற்ற அளவுகோல். தங்க அளவுகோல் பற்றிய அவரது கருத்துக்கள் ஜான் மேனார்ட் கீன்ஸ் உள்ளிட்ட முன்னணிப் பொருளாதார
வாதிகளின் கருத்துக்களுக்கு எதிரான வலுவான வாதங்களாகும். பணத்தின நிலைத்தன்மைக்கு ஆதரவான வாதங்களை முன்வைத்து நிலையற்ற பணமதிப்பு விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், அது அரசாங்கத்தின் ஆடம்பரச் செலவுகள் காரணமாக வருமானப் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, சமூகத்தின் கடைநிலைப்பகுதியை அதீதமாகப் பாதிக்கும் என்றும் அம்பேத்கர் வாதங்களை முன்வைக்கிறார். இதுதான் அந்த ஆய்வுக் கட்டுரையின் மையக் கோட்பாடு. இந்தக் கட்டுரையில் அங்குமிங்குமாக அவர் சில மதிப்பீடுகளைச் சொல்லியுள்ளார். தனியார் ஏஜெண்ட்டோடு ஒப்பிட்டு பொது ஊழியர் வீணாக இருப்பது அல்லது மதிப்பை நிர்ணயிக்க சந்தை முறை
என்பது போன்ற வாக்கியங்களை அவர் இணைத்துள்ளார். அப்போதைய நிலைமையின் பின்னணயில்தான் ஆய்வின் மையக்கரு உள்ளது என்பதால், சோசலிசத்துக்கு‍ ஆதரவாகவோ, எதிராகவோ அவரது தத்துவார்த்த சாய்மானம் இருந்தது என்ற முடிவுக்கு வரமுடியாது. அவ்வாறு செய்வது முழுதும் முட்டாள்தனமானது. 
இளம் அம்பேத்கர் மீது தாக்கம் செலுத்திய விசயங்களைப் பார்க்கும்போது, நமக்கு நல்ல பிம்பம் கிடைக்கிறது. கொலம்பியாவில் அவரது ஆசிரியர்கள் சிலர் அமெரிக்க ஃபாபியன்களாவர். இளம் அம்பேத்கர் மீது ஆழமான தாக்கம் செலுத்திய ஜான்டுவே புகழ்பெற்ற அமெரிக்க ஃபாபியன் சோசலிஸ்ட் ஆவார். ஒடுக்கப்பட்டோருக்கு உதவ வேண்டும், அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் ஒடுக்குமுறையை ஒழிக்க வேண்டும், அவர்களது விடிவுக்கு கல்விக் கருவிகளை முன்வைக்க வேண்டும் என்பது போன்ற டுவேயின் கருத்துக்கள்தான் அவரின் பக்கம் அம்பேத்கரை ஈர்த்தது. அம்பேத்கர் மீது பேரா. டுவே செலுத்திய தாக்கம் மிகவும் ஆழமானது. எந்த அளவுக்கு என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததற்காக அமெரிக்காவில் அவருக்கு 1952ல் எல்எல்டி கௌரவப்பட்டம் வழங்கப்பட்டபோது அங்கிருந்து தமது மனைவி சவிதாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், நான் எனது முழு அறிவுலக வாழ்க்கைக்கு பேரா. டுவேவுக்கு கடன்பட்டுள்ளேன் என்று குறிப்பிடுகிறார். அவரது பிற்கால வாழ்க்கையிலும் அவர் பேரா. டுவேவுக்கு தமது அறிவுலகக் கடனை பல்வேறு முறைகளில் வெளிப்படுத்தியுள்ளார். 
ஃபாபியனிசம் 1884ல் ஒரு பிரிட்டிஷ் சோஷலிச இயக்கமான ஃபாபியன் சொசைட்டியின் உருவாக்கத்தோடு பிறந்ததாகும். அதன் நோக்கம் ஜனநாயக சோஷலிசக் கொள்கைகளை புரட்சி வழியில்லாமல், காலப்போக்கிலான, சீர்திருத்த முறைகளின்படி முன்னெடுத்துச் செல்லுவதாகும். அது இங்கிலாந்தையும் தாண்டிப் பல சுதந்திரச் சிந்தனையாளர்களையும் ஈர்த்தது. ஃபாபியன்கள் தூய சோசலிஸ்டுகள் என்றாலும், மார்க்சியத்தின் புரட்சிகரக் கோட்பாடுகளை ஏற்கவில்லை. மாறாக சோஷலிசத்தை புரட்சிகர வழியில்லாதது, காலப்போக்கில் உருவாக்கிவிட முடியும் என நம்பினார்கள். அம்பேத்கர் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் என்ற நிறுவனத்தில் படித்து ரூபாயின் பிரச்சனை என்ற கட்டுரையினையும் எழுதினார். அந்த நிறுவனத்தை ஃபாபியினிசத்தின் கோட்டை என்று குறிப்பிடுவதுண்டு. ஃபாபியன் சொசைட்டியின் முக்கியமானவர்களான பெர்னார்ட்ஷா, சிட்னி மற்றும் பீட்ரைஸ் வெப் போன்றோர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சை உருவாக்கியவர்களில் ஒரு சிலர் என்பதோடு அவர்கள் அங்கு ஆசிரியர்களாகவும் இருந்தனர். ஆகவே அம்பேத்கர் தமது ஆய்வை மேற்கொண்ட அறிவுலகப் பின்னணியும் சோஷலிசப் பின்னணிதான். பகிஷ்கரித் பாரத் என்ற அமைப்பின் கோஷமாக அவர் தேர்வு செய்ததும், பின்னர் அறுபது சீடர்களுக்கு தமது தாரக மந்திரமாக வழங்கியதுமான கற்பி,ஒன்று சேர், போராடு,  என்ற கோஷம் உண்மையில் புகழ்பெற்ற ஃபாபியன் கோஷமாகும். அம்பேத்கரின் கோட்பாட்டின் இந்த உண்மையான அம்சம் இன்னமும் பெறுமளவு மறைந்தே உள்ளது என்பது அவர் மீதான தற்கால ஆய்வின் தரத்தை மிகவும் மோசமாகக் காட்டுகிறது. அவரது முழு வாழ்க்கையை புறவய வழியில் பார்த்தால் அவரது பெரும்பாலான தத்துவார்த்த நிலைபாடுகளில் ஃபாபியனின் தாக்கம் இருப்பதைக் காண முடியும். 
அம்பேத்கரின் மறைவுக்குப் பின்னர் 1960ல் முறையாகத் தோன்றிய பணக்கோட்பாட்டை அம்பேத்கரது ஆய்வில் 40 ஆண்டுகள் கழித்து தேடுவதும், மதிப்பீடுகளுக்கு வருவதும் அபத்தமானதாகும். கீன்ஸ் கோட்பாடு உருவாக்கும் முன்பு தானே தகவமைத்துக் கொள்ளும் சந்தையை நம்பிய செம்மைப் பொருளாதாரவாதிகள் பணம் அல்லது நிதிக் கொள்கையில் அரசாங்கத்திற்கு உள்ள பங்கினை காணவில்லை என்பது உண்மை. 1930க்கு முன்பு அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்துப் பொருளாதாரவாதிகளும் இப்பரந்த செம்மைப் பொருளாதாரப் பின்னணியில்தான் செயல்பட்டனர் என்பதில் கடுகளவே ஐயமிருக்க முடியும். 1930களில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கு, பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த தேவையை நிதிக் கொள்கை மூலம் உருவாக்க அரசாங்கத்திற்கு முக்கியப் பங்குள்ள கோட்பாடுகளை கீன்ஸ் உருவாக்கினார். கீன்ஸ் கோட்பாடு, முதலாளித்துவத்தை அதன் தவிர்க்கவியலாத அழிவிலிருந்து காப்பாற்றியதுடன் போருக்குப் பிந்தைய உலகின் நிகழ்வான பொருளாதார முறையாகவும் ஆனது. அது முதலாளித்துவத்தைக் காப்பாற்றியது மட்டுமல்ல, அதன் பொற்காலத்தையும் உருவாக்கியது. ஆனால் 1960களில் முதலாளித்துவம் மற்றொரு நெருக்கடி மிகுந்த காலத்தை சந்தித்தபோது, கீனிசியக் கோட்பாட்டுக்கு எதிரான பணக்கோட்பாட்டு எதிர்ப்புரட்சி ஏற்பட்டது. இதை உருவாக்கிய மில்டன் ஃப்ரைட்மேன் சிகாகோ பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். அவர் எதிராக வாதிட்டதுடன், பொருளாதாரத்தில் உற்பத்திப் பெருக்கத்திற்கும், வேலை வாய்ப்பு அளவை அதிகரிக்கவும், பணக் கோட்பாட்டை அதற்கு மாற்றாக முன்மொழிந்தார். சுதந்திரச் சந்தைக்கு ஆதரவான தலையிடாக் கொள்கைகளான கருத்தியல் தளத்திற்கு உகந்தவாறு அது செவ்வியல் கோட்பாட்டின் சில அம்சங்களை முக்கியமாக மாற்றியமைத்தது. செவ்வியல் பொருளாதாரத்தின் சுய தகவமைப்பின் மீதான நம்பிக்கையை சுதந்திரச் சந்தையின் பணக் கோட்பாட்டின் நிலையோடு ஒப்பிடக் கூடாது. அம்பேத்கரை சுதந்திரச் சந்தையை முன்மொழிந்தவர் என்றோ குறிப்பாக சோஷலிசத்திற்கு எதிரானவர் என்றோ பார்ப்பது சூழ்ச்சிகரமானது. 

கருவறை சோஷலிஸ்ட் 
அம்பேத்கரை மேலோட்டமாகத் தெரிந்தவர் என்று கூறுபவர்கள் கூட அவரது இந்த வாக்கியத்தை அறிந்திருப்பர் என்றே நினைக்கிறேன். 
எனது சமூகத் தத்துவம் மூன்று வார்த்தைகளில் பொதிந்திருப்பதாகக் கூறலாம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். 
"எனது தத்துவத்தின் வேர் மதத்தில் உள்ளது, அரசியல் தத்துவத்தில் இல்லை. நான் அவற்றை எனது பேராசான் புத்தரின் படிப்பினைகளிலிருந்து எடுத்துக் கொண்டேன்". 
இந்த மூன்று வார்த்தைகளும் மனித இனத்தின் விதியின் மீதான அவரது பார்வையையும் அவர் புத்த மதத்துக்கு மாறியதன் காரணத்தையும் அளிக்கின்றன என்பது உண்மையே. அவற்றின் பொருள் என்னவாக இருக்கும்? இந்த வார்த்தைகள் பிரெஞ்சுப் புரட்சியின் கிளர்ச்சியூட்டும் கோஷமாகவும், ஊக்கமாகவும் இருந்தது என்பதை உலகறியும். அவை அம்பேத்கர் கண்டெடுத்ததாகக் கூறப்படும் புத்த மதத்தில் எங்கும் காணப்பட வில்லை என்பதையும் உலகறியும். பிரெஞ்சுப் புரட்சியில் அவை முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றுக் கோஷங்களாக மட்டுமே இருந்தன. ஆனால் பௌத்தத்தில் அவை அவற்றின் முழு ஊக்கத்துடனும் முழு உள்ளடக்கத்துடனும் காணப்பட்டன என்பதில்தான் அவற்றை ஏன் அம்பேத்கர் வரித்துக் கொண்டார் என்பதற்கான காரணம் அடங்கியுள்ளது. புத்தர் கண்டதைப்போல் மனித சமூகமும் அவற்றை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டுமென அவர் கனவு கண்டார். ஆனால் அதனை ஒரு இலட்சியமாக, கற்பனையாக மட்டுமே காணமுடியும். மார்க்ஸ் மனித இனத்தின் உச்சபட்சக் கட்டத்தை கம்யூனிச வடிவில் கண்டார். அங்கு பெரும்பாலான பெரிதும் அறியப்படுகிற முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு மனிதர்கள் தமது சக்திக்கேற்ப உழைத்து, தமது தேவைக்கேற்பப் பெறுவர். இந்த தீர்க்க தரிசனங்கள் ஒன்றிணையாதா? அப்படியானால் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல் வாதம் வழிகாட்டுவதுபோல், சோசலிசம் என்பது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் அதற்கு முந்தையக் கட்டம். அம்பேத்கரின் தத்துவார்த்த நிலைப்பாடும் மார்க்சைப் போலவே சோஷலிசத்தைத் தாண்டியதாக உள்ளது‍ என எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 
கம்யூனிஸ்டுகள் மீதும் கம்யூனிசத்தின் மீதுமான அவரது எதிர்க் கருத்துக்களை தமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்பவர்கள் அவரை மார்க்சிய விரோதியென்றும் மார்க்சியம் எவற்றுக்காக நின்றதோ அவையனைத்துக்கும் எதிரானவரென்றும் அவரைச் சித்தரிக்கின்றனர். அவ்வாறு செய்யும்போது, அவரை அவர்கள் எதிரி முகாமில் தள்ளிவிடுவதற்கும் தயங்குவதில்லை. அவர் முதலாளித்துவ ஆதரவாளர், உலகமய ஆதரவாளர், சுதந்திரச் சந்தைக்கு ஆதரவானவர் என்று கூறுவது அதற்குச் சமமானதேயாகும். ஏற்கனவே விளக்கியதுபோல், தாக்க மேற்படுத்தவல்ல வயதில், அம்பேத்கர் கொலம்பியாவிலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சிலும் தமது பேராசிரியர்களின் கருத்துருவாக்கத்திற்கு ஆளானார். அவர்கள் சோசலிசத்தை விரும்பினாலும் மார்க்சியம் முன் மொழிந்த புரட்சி வழிமுறை மீது தயக்கம் கொண்டிருந்தனர். மார்க்சியத்தின் மீது அம்பேத்கர் அதேபோன்ற அணுகுமுறையைக் கொண்டிருந்தார் என்பதுடன், அதனை அடிப்படை அலகாகவும் தமது முறைகளின் மேலான தன்மையை அளவிடும் உண்மையான அளவீடாகாவும் கருதினார். ஒருவர் இந்தக் கருத்தை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம், ஆனால் அவர் சோஷலிஸ்ட் என்பதை சந்தேகிப்பதற்கு இடமேயில்லை. தத்துவார்த்த சாய்மானத்தில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கை முழுவதும் நடைமுறையில் அவர் சோஷலிச இலட்சியங்களைத்தான் வெளிப்படையாகவே நடை முறைப்படுத்தினார். அவரது முதல் அரசியல் கட்சியான இன்டி பெண்டன்ட் லேபர் கட்சி இங்கிலாந்தின் லேபர் கட்சியின் வழியில் அமைந்தது. அதுவும் ஒரு ஃபாபியன் அமைப்பேயாகும். அதற்கும் முன்பாகவே அவர் தீண்டத் தகாதோரின் எதிரிகளாக புகழ்பெற்ற வகையில் இருவரை அடையாளம் கண்டார். அவை பிராமணீயம் மற்றும் முதலாளித்துவம் ஆகும். உண்மையில், அடையாள பூர்வ அளவில், தீவிர இடதுசாரிகள் நமது சமூகத்தை "அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனியச் சமூகம்" என்று வர்க்க குணாம்சப் படுத்துவது இந்தப் பிரகடனத்தை எதிரொலிக்கக் கூடும். உண்மையில் இந்திய லேபர் கட்சி செம்பதாகையை விரித்துக் கொண்ட ஒரு உழைப்பாளர் கட்சி. சோஷலிச இலட்சியத்தால் ஊக்கம் பெற்ற கட்சி. சாதியும், வர்க்கமும் ஒரு போராட்டத்தில் எப்படி ஒழிய இயலும் என்பதை வீதிகளில் நடத்திக்காட்டியது இந்திய லேபர் கட்சி. 
அது வெற்றியடைந்தாலும், அவர் இந்திய லேபர் கட்சியின் இடதுசாரி அரசியலை வெளிப்படையாகக் கைவிட நேர்ந்தது. ஏனெனில் வகுப்புவாதத் திருப்புமுனையை அரசியல் எடுத்துக் கொண்டிருந்ததேயாகும். பிப்ரவரி 1942ல் வெளியிடப்பட்ட கிரிப்ஸ் மிஷன் அறிக்கை மற்ற சிறுபான்மையினரின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அதே சமயத்தில், தாடிநத்தப்பட்டோரை பிரதிநிதித்துவப்படுத்த யாருமில்லாததால் ஒட்டுமொத்தமாக பொருட்படுத்தாதது நேரடித் தூண்டுதலாக அமைந்தது. அது அவரைத் தமது உத்தி குறித்து மறுசிந்தனை செய்ய வைத்து, ஒரு சாதி அடிப்படையிலான கட்சியாகத் தோன்றும் ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷனை 1942 ஜூனில் தோற்றுவிக்க வைத்தது. அது அவரை வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இடம்பெறச் செய்த நிகழ்ச்சியுடன் ஒன்றிணைத்தது. அவரது சமகாலத்திய வகுப்பு வாதம் மிகுந்த அரசியலில் தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக முனைப்பாக இருந்தாலும், ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன் சார்பில்
அரசியல் நிர்ணய சபைக்கு அவர் தயாரித்துச் சமர்ப்பித்த மகஜர் குறிப்பிடத் தக்க ஆவண மென்பதை அவரே நினைவில் கொள்ள வேண்டும். பின்னர் அரசுகளும் சிறுபான்மையினரும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், அவரது விளக்கத்தின்படியே, காலனியாதிக்கத்துக்குப் பிந்தைய இந்தியாவில் அரசு சோஷலிசத்தை முன்மொழிந்தது. 
அம்பேத்கர் சோஷலிசத்துக்கு எப்படி எதிரானவர் என்று வாதிட்ட அம்பேத்கர் சுதந்திரச் சந்தைக்கு ஆதரவானவர் என்று கூறி அவமதித்த போலிப் பொருளாதாரவாதி அதற்கு ஆதரவாக முன்வைத்த ஒரு வாதம், அரசியலமைப்புச் சட்டத்தில் சோசலிசம் என்ற வார்த்தையை சேர்ப்பதற்கு அவர் எதிராக இருந்தார் என்பதாகும். அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கரால் எழுதப்பட்ட ஒரு புத்தகமல்ல, மாறாக அரசியல் நிர்ணய சபையில் உருவான கருத்தொற்றுமையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு ஆவணம். ஒரு கருத்தொற்றுமையை உருவாக்குவதே அவரது பணி. அரசியல் நிர்ணய சபையில் அவரது வாதங்களெல்லாம் இந்த எல்லைக் கோட்டுக்குள் தான் பிரிக்கப்பட வேண்டும். சோஷலிசம் என்ற வார்த்தையை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதைப் பொறுத்தவரை அதிர்ஷ்டவசமாக அவர் கூறியது அப்படியே நம்மிடம் உள்ளது. அது இத்தகைய சந்தேகங்களைப் போக்கிவிடும். 
"அரசின் கொள்கை எதுவாக இருக்க வேண்டும், சமுதாயம் தனது சமூகப் பொருளாதார விஷயங்களில் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் காலத்தையும், சூழ்நிலையையும் பொறுத்து மக்கள் தாமே தீர்மானிக்க வேண்டியவை. அவற்றையெல்லாம் அரசியலமைப்புச் சட்டத்திலேயே எழுதிவைக்க முடியாது. ஏனெனில் அது ஜனநாயகத்தையே ஒட்டுமொத்தமாக அழிப்பதாகிவிடும். நீங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் தேசத்தின் சமூக அமைப்பு குறிப்பிட்ட வடிவத்தில் இருக்குமென்று எழுதிவிட்டால், என்னுடைய கருத்துப்படி மக்கள் தாம் வாழ விரும்பும் சமூக முறையைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை நீங்கள் பறித்துவிடுகிறீர்கள். பெரும்பாலான மக்கள் முதலாளித்துவ சமூக அமைப்பை விட சோஷலிச சமூக அமைப்பில் வாடிநவதையே விரும்பக் கூடுமென்பது இன்று பெருமளவு சாத்தியமேயாகும். ஆனால் இன்றைய, அல்லது நாளைய சோஷலிச அமைப்பை விட மேலான ஒரு சமூக அமைப்பை மக்கள் உருவாக்க முடியுமென்பதற்கும் வாடீநுப்பு நிறைய உண்டு. எனவே அரசியலமைப்புச் சட்டம் ஏன் மக்களைக் குறிப்பிட்ட அமைப்புக்குள்தான் வாழவேண்டுமெனக் கட்டிப்போட வேண்டும், அதனை அவர்களே முடிவெடுத்துக் கொள்வதற்கு ஏன் விட்டுவிடக் கூடாது என்ற எனது கேள்விக்கு விடை வேண்டும்". (டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 13, பக்கம். 326)
சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்ப்பதை அவர் ஏன் ஆதரிக்கவில்லை என்பதை விளக்கியபிறகு, மற்றபடி அரசியலமைப்புச் சட்டத்தில் சோஷலிசக் கருத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை அவரே விளக்குகிறார். 
"...நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் இணைத்திருக்கும் அடிப்படை உரிமைகளைத் தவிர, அரசின் கொள்கைகளை வடிவமைப்பதற்கு வழிகாட்டும் நெறிகளையும் நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். மரியாதைக்குரிய நண்பர், நான்காம் பகுதியின் கீழுள்ள பிரிவுகளை படித்தாரேயானால், சட்டமன்றம், அரசு நிர்வாகம் இருவரும் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்களது பொறுப்புகள் அமையும்படி குறிப்பிட்ட கடமைகளின் கீடிந இயங்கும்படி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பார். இப்போது இந்த விஷயத்தைப் பற்றிய பிரிவு 31ஐ மட்டும் காண்போம்:-
அது இவ்வாறு கூறுகிறது" "குறிப்பாக அரசு கீடிநக்கண்டவற்றை அடையும் வகையில் தனது கொள்கைகளை செயல்படுத்தும்:
அ) குடிமக்களான ஆண்களும் பெண்களும் சமமான முறையில் வாடிநவாதாரத்துக்குத் தேவையானவற்றைப் பெறும் உரிமை கொண்டிருக்கவும்
ஆ) கழகத்தின் உடைமைகளும் ஆதாரங்களின் மீதான உரிமையும், கட்டுப்பாடும் பொதுநலனுக்கு உட்பட்ட வகையில் பகிரப்படுவதும்,
இ) பொருளாதார முறைமை நடைமுறையில் செல்வத்தையும் உற்பத்தி சாதனங்களைக் குவிப்பதிலும் பொது கேடு விளைவிக்கும் வகையிலும் முடிந்துவிடாத வகையிலும்,
ஈ) ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமமான வேலைக்கு சமமான ஊதியம் கிடைக்கும் படியும்...
இதேபோன்று ஏறத்தாழ வலியுறுத்தும் வேறு சில அம்சங்களும் உள்ளன. நான் பேரா. ஷாவைக் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். நான் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ள வழிகாட்டும் நெறிகள் அவற்றின் திசையில் சோஷலிசம் அல்லவென்றால், சோஷலிசம் இதைவிட வேறு என்னவாக இருக்குமென்பதை என்னால் புரிநதுகொள்ள முடியவில்லை. எனவே எனது வேண்டுகோள் என்னவென்றால், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே சோஷலிசக் கொள்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்பதேயாகும். (அதே தொகுதிபக்கம் 326 -327)
காட்மாண்டுவில் அவர் ஆற்றிய இறுதிஉரைகளில் ஒன்றில் அவர் பௌத்தத்துடன் மார்க்சியத்தை ஒப்பீடு செய்துள்ளார். மார்க்சியத்தை சிறந்தவற்றில் இரண்டாவதாக அவர் தேர்வு செய்துள்ளார். இந்த ஒப்பீட்டில் இரண்டின் நோக்கங்களுமே ஒன்றுதான் எனவும், அகிம்சை, ஜனநாயகம் ஆகிய விஷயங்களில் மார்க்சியத்தை விட பௌத்தம் மேலானதென்று அவர் தெளிவாகக் கூறுகிறார். ஒடுக்குமுறையையும், சுரண்டலையும் ஒழிக்கும் சமத்துவ சமூகம் வரவேண்டுமென்பதே இலட்சியம். அது சோஷலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியமானது. அல்லது அம்பேத்கர், மார்க்ஸ் இருவருமே இதைத்தாண்டிச் சென்று, சோஷலிசத்துக்கு அப்பால் ஒரு கற்பனை சமூகத்தை விரும்பினர். எவ்வாறாயினும், இத்தகைய ஒரு சமூக முறை முதலாளித்துவத்தின் உள்ளடக்கத்திலேயே சாத்தியமற்றது. காரணம் முதலாளித்துவம் மனிதனின் கட்டுக்கடங்காத பேராசையான, குவிக்கும் முனைப்பில் உள்ளது. முதலாளித்துவம் அல்லது அதன் தற்கால தீவிரவாத வடிவமான புதிய தாராளமயம் முன்வைக்கும் சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றில் சமூக நீதிக்கான பாசாங்கு கூடக் கிடையாது. மாறாக சமூகக் கட்டமைப்பில் தமது தகுதிகளுக்கேற்ப மட்டுமே மக்கள் பல்வேறு நிலைகளிலிருக்கிறார்கள் என்று கூறியோ முன்னேற்றத்தில் சமத்துவம் முக்கியமான பங்கை வகிப்பதால் அது விரும்பத்தக்கது என்று கூறியோ அநீதியை நியாயப்படுத்துகிறது. அம்பேத்கர் அசமத்துவத்தை நியாயப்படுத்தும் இத்தகைய முதலாளித்துவம் அல்லது புதிய தாராளமய உலகமய முறைகளை ஆதரித்தார் என்று கூறுவதைவிட அதிகப் பிரசங்கித்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. முதலாளித்துவம் சாதிய நிலப்பிரபுத்துவத்துவத்தை விட முற்போக்கானது. அது தொழிலாளியை நிலப்பிரபுத்துவ அடிமைத் தளையிலிருந்து அடிப்படையில் விடுவித்தது.
(இதுதான் இந்தியாவில் முதலாளித்துவம் உருவானவுடன் சாதிய முறையை ஒழித்துவிடுமென்று மார்க்சை அனுமானிக்க வைத்தது) என்ற வாதங்கள் நிற்காது. ஏனெனில் முதலாளித்துவமும், பிராமணீயமும் சகவாடிநவு வாடிநந்தது மட்டுமல்ல, சேர்ந்தே வகித்தன, ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டன என்பதை அம்பேத்கர் கண்டார். அம்பேத்கர் தாம் ஒரு சோஷலிஸ்ட் என்று தெளிவாக ஒருமுறையல்ல பலமுறை கூறியுள்ளார். இதைப்பற்றி தமக்குத் தெரியாது என்று யாரேனும் பாசாங்கு செடீநுதால் அவர் அம்பேத்கரைப் பற்றிப் பேசக்கூடாது.

அம்பேத்கரும் உலகமயமும்
அம்பேத்கரின் சிந்தனைக்கும் உலகமயத்திற்குமான உறவுகளைப் பற்றி விவாதிக்கும் முன்பாக, முதலாளித்துவத்தின் அதிதீவிர வடிவத்திலான மாற்றமாகவும், அடிப்படையில் சூதாட்டத் தன்மையதாகவும் உலகமயம் இருப்பதை உணர வேண்டும். ஆனால் தேவதைகள் செல்வதற்கு அஞ்சும் இடங்களுக்குக்கூட விரைந்து செல்கிற அளவுக்கு முட்டாள்கள் உள்ளனர். உலகமயத்துக்கான தமது ஆதரவை பகுத்தறிவு கொண்டு நியாயப்படுத்த முடியாததால் அவர்கள் அபத்தமாக அம்பேத்கரை இதற்குள் பொருத்த முயல்கின்றனர். அவர் உயிருடன் இருந்திருந்தால் அவர் உலகமயத்தை ஆதரித்திருப்பார் என ஊகங்களைப் பரப்புகிறார்கள். எப்படியாயினும், பொருளாதாரக் கொள்கைகள் குறித்துக் குறைந்த புரிதலே கொண்டு ஏமாறும் நேயர்கள், அறிவுஜீவிகளென்று பாசாங்கு செடீநுகிற, சிறிது சமூக மரியாதையும் பெற்றுள்ள இந்தத் தந்திரக்காரர்களை நம்பத் தலைப்படுகின்றனர். இந்த ஊகமான நிலையில் அவர்களுடன் மல்லுக்கு நிற்பது ஏமாற்றமளிக்கும். எனினும், உலகமயம என்பது என்னவென்பதை புறவய நிலையிலிருந்து ஆழமாக ஆராய்ந்தால், நாம் உலகமயத்துக்கு எந்தப் பக்கத்தில் அம்பேத்கர் நின்றிருப்பார் என்பதை அளவிட்டுவிட முடியும். 
கம்யூனிஸ்ட் சவால் மற்றும் கீனிசியக் கோட்பாடு ஆகியவற்றால் ஒரு நூற்றாண்டுக்கு ஓரங்கட்டப்பட்டதற்கு‍ எதிராக மீண்டெழும் தாராளமயத்தின் தீவிரமான வடிவம்தான் உலகமயம். அது தீவிரமான தனிநபர்வாதம், முன்னேற்றத்துக்கான முக்கிய உந்துதலாக போட்டி, தனது மாதிரியாக சுதந்திரச் சந்தையையும் அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு ஒவ்வொரு தனிநபரையும் மீதமுள்ள உலகிற்கெதிராகப் போட்டியில் நிறுத்தி அது அசமத்துவம், சுரண்டல், சமூக அநீதி ஆகியவற்றுக்கு வழிவகுக்கிற சமூக டார்னிசக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. ஏழை மக்களுக்கெதிராக பணக்காரர்களுக்கும், வலியோருக்கும் ஆதரவாக இருக்கும் அது தனது இரக்கமற்ற தர்க்க வழிமுறையால் வெற்றியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு தோல்வியாளர்களை அழித்தொழிக்கிறது. ஆகவே அதன் சாய்மானத்தின் காரணமாக அதுதன்னை நீடித்து நிலைநிறுத்திக்கொள்ள முடியாததாகும். ஒரு பொருளாதார கொள்கைத் தொகுப்பில் அது தனியார்மயம், கட்டுப்பாடு நீக்கம், தாராளமயம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. அது பலவீனமானவர்கள், ஏழைகள் குறித்து எந்தக் கவலையும் கொள்வதில்லை. அது தகவல் தொழில்நுட்பம் சாத்தியமாக்கிய உலகளாவிய மூலதனத்தின் கிளர்ச்சியூட்டும் உத்தியைக் கொண்டுள்ளதுடன், முந்தைய சோவியத் யூனியனின் சிதைவால் தைரியம் பெற்றுள்ளது. மற்றவர்களிடமிருந்து பறித்துக் குவிக்கும் நடைமுறையின் வடிவத்தில், மனித இனத்தின் இருப்புக்கே கடும் விளைவுகளை ஏற்படுத்துவது குறித்துக் கவலை கொள்ளாமல் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. உலகெங்கிலும் அனைத்தும் சந்தையின் வலைக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் தம்மிடம் இருக்கும் மிகவும் குறைந்த சொத்துக்களையும் இழக்கச் செடீநுயப்படுகின்றனர். உலக மூலதனத்தின் இந்தக் குவிப்பு நடைமுறைகளுக்கு வசதி செய்ய அரசு உபயோகிக்கப்படும் அதே சமயம், மக்களுக்கு கல்வி, உடல்நலம் போன்ற சமூக நல நட
வடிக்கைகளை அளிக்கும் கடமையினைக் கைவிடவும் செய்யப்படுகிறது. 
இதுதான் உலகமயத்தின் குணாம்சமென்றால்
மனித இனத்தின் விதியை சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகத்தில் காணவிரும்பிய அம்பேத்கர் இதனை ஆதரிப்பாரா? அம்பேத்கருக்கு தத்துவ ரீதியாக எதிரியாக எதையாவது காண வேண்டு மென்றால் அது உலகமயமாகவே இருக்க முடியும்.

உலகமயமும் தலித்துக்களும்
அடையாள அரசியல் தாக்கம் பெற்ற தலித்துக்கள் உலகமெங்கும் உலகமயம் உருவாக்கியிருக்கும் பேரழிவுச் சித்திரத்தை ஒருவேளை காணத்தவறியிருப்பார்கள். உதாரணமாக அந்தந்த நாடுகள் கடைப்பிடித்த சுதந்திரத்தைக் கொள்கைகளின் அளவுக்கேற்றபடி நேரடி விகிதத்தில் எங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாடுகளில் அசமத்துவம் வளர்ந்துள்ளது என்பதில் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை. வேலைவாய்ப்பு, ஜனநாயகத்திற்கான இடம் , இருப்பிடம், சுற்றுப்புறச் சூழல், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் இழப்புகள் எல்லா இடங்களிலும் பெருமளவில் காணப்படுகின்றன. ஆனால் அடையாள அரசியலால் கவரப்பட்டிருக்கும் தலித்துக்கள் இந்தத் தொடர்பைக் காண மறுக்கலாம். அவர்கள்தான் சாதி என்ற தனித்தன்மைகொண்ட பிரச்சனையை சந்திக்கும் வேறுபட்ட மக்களெனவும், அதற்கெதிராகக் குவிந்திருக்கும் ஆதாரங்களெல்லாம் அவர்களுக்கு அர்த்தமற்றவை என்றும் இன்னும் வாதிடுவர். தலித்துக்கள் தமது அணுகுமுறையில் இந்த அளவுக்கு தனிமையைக் கடைப்பிடிப்பது வருந்தத்தக்கது என்றாலும், தலித்துக்கள் சந்திக்கும் பிரத்தியேகப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த இந்த வாதங்களின் காரணமாகத் தூண்டப்படுகின்றனர். 
மக்கள் தாமே அறிந்தபடி, சமூகக் கட்டுமானத்தில் தாம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு விகிதமாக உலகமயத்தின் மேலான தாக்கம் உள்ளது எனும் போது, தலித்துக்கள்தான் அதிகபட்சத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பதைக் காண்பது கடினமல்ல. ஆனால் இத்தகைய விஷயங்களும் கூட தலித்துக்கள் மீது தாக்கம் செலுத்தாது. எனவே அதன் தாக்கத்தை அளவிட, ஒரு விரிவான வரையறையை நாம் எடுத்துக்கொள்ளலாம். அதை அவர்களது விடுதலைக்கான திட்டமாக நாம் அதை அழைக்கலாம். இந்தத் திட்டத்தை நான்கு வகையான அதிகாரமளித்தல்கள் மூலம் அடையலாம். அவையாவன:
1) தனிநபருக்கு அதிகாரமளித்தல்
2) சமூகப் பொருளாதார அதிகாரமளித்தல்
3) சமூக - அரசியல் அதிகாரமளித்தல்
4) சமூகக் கலாச்சார அதிகாரமளித்தல்.
இந்த நான்கு வகை அதிகாரங்கள் அளிக்கப் பட்டுவிட்டால், தலித்துக்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதென்று ஏற்கலாம். இந்த நான்கு அதிகாரங்களை அளிக்க முக்கியமான மாற்று அளவீடுகளை நாம் அடையாளம் காண்போம்.
தனிநபர் அதிகாரமளித்தலுக்காக கல்வியும் சுகாதாரமும் சமூகப்பொருளாதார அதிகாரமளித்தலுக்காக நிலச்சீர்திருத்தம் மற்றும் வேலை, சமூக - அரசியல் அதிகாரமளித்தலுக்காக ஜனநாயகப்படுத்துதல் சமூகக் கலாச்சார அதிகாரமளித்தலுக்காக நவீனமயம் எனக் கொண்டால் இப்போது இந்த மாற்று அளவீடுகள் ஒவ்வொன்றின் மீதும் உலகமயத்தின் தாக்கத்தை அர்த்தமுள்ள வகையிலும் அறிவியல்பூர்மாகவே அளவிடலாம். மக்கள் மீதான உச்சபட்சத்தாக்கம் அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து வெளியேறுதல் மற்றும் பொதுச் சொத்தாக இருந்ததை தனியார்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் வந்தது. பெருமளவுக்கு வழியேற்படுத்தியதாகக் குறிப்பிடத்தக்க கல்வி இன்று தலித்துக்களுக்கு கிடைக்காத தூரத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. கல்விச்சந்தையின் வியாபாரமயம் பல அடுக்கு தரத்தை வெவ்வேறு பிரிவினர்களுக்கு வழங்குவதாக அத்துறையை மாற்றியுள்ளது. அது பழைய காலத்தில் நிலவிய சாதிஅடுக்குகளுக்கு பெருமளவில் ஒத்ததாக தோன்றுகிறது. நாட்டிலேயே அதிக அளவில் தனியார்மயமான துறைகளில் ஒன்று சுகாதாரத்துறை. இப்போது அது அநேகமாக பொதுத்துறையின் பிடிப்பிலிருந்து மறைந்தேவிட்டது. நிலச்சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை, அதுபற்றிய முழுப் பேச்சுமே மறைந்துபோடீநு அதற்குப் பதிலாக வளர்ச்சி என்ற போர்வையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் நிலப்பறிப்பு வந்துவிட்டது. அதன் வெளிப்பாடுகளாக தலித்துகளின் நில இழப்பும் நிலமின்மையும் அதிகரிக்கின்றன. வேலைகள் மிக வேகமாகக்காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. பொதுத்துறையில் தலித்துகளுக்குக் கிடைத்துவந்த வேலைகள் 1997லிலிருந்து வேகமாகக் குறைந்து வருகின்றன. அது அங்கு இட ஒதுக்கீடு காணாமல் போவதைக் குறிக்கிறது. ஜனநாயகத்தைப் பொறுத்தவரை அது தேர்தல்களில் ஒரு அடையாளப்பூர்வமான போலி முகமாக மட்டுமே இருந்துள்ளது. அது மக்களுக்கு உண்மையில் ஒரு சிறிய தேர்வையே அளித்தது. தேர்தலுக்கு வெளியே தமது கருத்தையோ, மறுப்பையோ வெளியிட மக்களுக்கு
இடமேயில்லை. மறுப்பு சிறிய அளவில் வெளிப்பட்டால் கூட தலித் இளைஞருக்கு மாவோயிஸ்ட் பட்டம் சூட்டப்பட்டு அவரது எதிர்காலம் அழிக்கப்படும் வகையில் தண்டிக்கப்படுவர். கடைசியாக நவீன மயம், அதாவது சீர்கெட்ட பழைய பாரம்பரியங்களையும், வழக்கங்களையும், அவற்றின் மூலாதாரம் எதுவாக இருப்பினும் அவற்றைத் தாண்டி, அறிவியல் பார்வையைப் பெறுவது என்று அர்த்தப்படும். உலகமயத்தில் இருக்கும் கலாச்சார உலகமயத்துடன் கூடிய
ஆதிக்கமிக்க விவரணை காரணமாக இது சிக்கலான விளக்கமாக இருக்கக்கூடும். எனினும் அது உண்மையல்ல. உண்மையில் நடைமுறைகள் உயர் நவீனக் கலவை, உலகமயம் போன்றவற்றால் அறிவு ஜீவிகளின் மதிப்பீடுகள், உலகளாவிய கலாச்சார வளங்கள் போன்றவற்றின் தாக்கங்களுக்கு ஆளாகின்றன. இதனால் 1980கள் வரை தயக்கத்தோடு பேசப்பட்ட இந்துமதச் சடங்குகள் - சாதிய நடைமுறைகள் உள்ளிட்டவை தற்போது வன்மத்தோடு வெளிப்படுத்தப்படுகின்றன. 
1980 வரை மன்னிப்புக் கோரும் வகையில் பேசப்பட்ட இந்துத்துவம் மற்றும் சாதிகள் உட்பட அனைத்து பழைய பாரம்பரியங்களும், வழக்கங்களும் வன்மத்துடன் மீண்டெழுந்துள்ளன. புதிய தாராளமயத் தலைமுறை அவற்றை பெருமையுடன் பேசுகின்ற சாதியத்துக்கு அடையாளமாக சாதிய அராஜகங்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமெனில் (நான் அதை சிறந்த அளவீடாக எடுத்துக்கொள்வேன்) சாதியம் நிச்சயமாக உலகமய காலகட்டத்தில் திட்டவட்டமாக வளர்ந்து வருகிறது என்பதை யாரும் அனுமானிப்பர். 
இவ்வாறு தலித்துக்களின் விடுதலைக்கான திட்டத்தை உலகமயம் பெருமளவில் பாதித்துள்ளது என்பதை தாம் காணமுடியும் நிச்சயமாக அதனால் பெருமளவு பயனடைந்திருக்கும் தனிப்பட்ட தலித்துக்கள் ஆங்காங்கே ஒரு சிலர் இருக்கக்கூடும். உலகமயக் கட்டுமானம் ஆங்காங்கே தனிநபர்களுக்குப் பலனளிக்கும் விதத்தில் அமைந்ததாகும். அது ஒரு தனிநபருக்குப் போட்டியிடும் திறன் இருந்தால் அவரால் எதையும் சாதிக்க முடியுமென்பது போன்ற மனத் தாக்கத்தை உருவாக்கும் எதிரியின் தத்துவத்தை அப்படியே ஏற்கும் கொள்கையென்பது தற்கொலைக்கு சமமானது என்பதைக்கூட விட்டு விடுவோம். தலித் முதலாளித்துவம், தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இத்தகைய போக்குகள் குறித்துப் பிரச்சாரம் செய்வோருக்கு இந்தப் பிரச்சனையின் பரிமாணம் குறித்து எளிய புரிதல்கூட இல்லை.

முடிவுரை
தலித் மனநிலையில் பாபாசாகேப் அம்பேத்கர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர்களது இலட்சியம், தத்துவம் மற்றும் மேலாண்மையை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவருடன் ஒத்துப்போகாத எதையும் தலித்துக்களால் ஏற்க முடியாது. ஆனால் இந்த அளவீடு பல்வேறு முகமூடிகளுடன் கூடிய சுயநல சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் அவரை ஏற்கெனவே பிற்போக்கான வழிகளில் மக்களிடையே வழிபாட்டு அடையாளமாக்கிவிட்டனர். எனவே, எதையும் அளவிடுவது என்பது இந்த அடையாளத்தைப் பொறுத்தே அமையும். எனவே எதுவும் இந்த அடையாளத்துடன் இயைந்து செல்லாவிட்டால், மக்களின் அனுபவம் நேரெதிராக இருப்பினும் கூட, அப்படியே
ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும். 
சுமாராகக் கடந்த இருபதாண்டுகளில் இருந்துவரும் உலகமயம் இத்தகையதொரு நிகழ்வு ஆகும். தலித்துகளில் பெரும்பாலோர் அதன் மோசமான விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் கூட அவர்கள் தமது கடும் வெறுப்பை பிரதிபலிக்கவில்லை. காரணம் அது அம்பேத்கர் அடையாளத்தால் ஆதரிக்கப்படுவதாகக் காட்டப்படுவதேயாகும். தலித்துக்கள் இந்த உண்மையை முதலில் புரிந்து கொண்டு, உண்மையான முற்போக்கான அம்பேத்கரை தமது வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் ஏற்க வேண்டும். முற்போக்கான அம்பேத்கர் நிச்சயமாக ஒரு சோஷலிஸ்ட் அம்பேத்கர், உண்மையைத் தேடி விட்டுக் கொடுக்காமல் போராடியவர், உலகை நிலைத்தன்மைக்கு இட்டுச் செல்லும் வழியைத் தேடியவர், அவர் குறிப்பிட்ட மூன்று இலட்சியங்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடையாளப்படுத்தும் கற்பனை உலகுக்கு மனித இனத்தை அழைத்துச் செல்வதற்காகவும் அயராது போராடியவர். இதனை தலித்துக்கள் நேரடியாக உள்வாங்கிக் கொண்டாலும், அவர்கள் அவரை சுயநல சக்திகள் உருவாக்கிய எதிர்ப்புரட்சி புதைகுழியிலிருந்து வெளிக்கொண்டு வந்திருப்பார்கள். 

உலகளாவிய மூலதனம் என்ற ஏகாதிபத்திய உத்திக்கு நல்லர்த்தம் தொனிக்கும் வார்த்தை உலகமயம். சாரத்தில் அது முதலாளித்துவம் கட்டுப்பாடற்ற இலாபத்தைத் தேடி தனது சொந்த நிலைத்தன்மையைப் பற்றிக் கருதாத ஒரு தீவிரவாத வடிவம். முதலாளித்துவமானது உபரி மதிப்பை தொழிலாளிகளிடமிருந்து சுரண்டுவதில் உள்ளார்ந்த வரையறை கொண்டிருந்தது. தொழிலாளி மறு உற்பத்தி செடீநுயவும், உற்பத்தியான தனது பொருளை வாங்க வாங்கும் சக்தியும் பெறுவதற்கான தேவைகளை அவனுக்கு முதலாளித்துவம் அளிக்க வேண்டியிருந்தது. ஆனால், தொழில்நுட்பத்தால் வெளியேற்றப்பட்டுள்ள உலகமயம் தொழிலாளியை முழுமையாக கைவிடவோ அல்லது அவனிடம் இருக்கும் சிறிய அளவு சொத்தையோ கூட பறித்து விடுமளவுக்கோ தாக்குதல் தொடுக்கிறது. அது பெரும்பான்மையான மக்களை விலக்கி வைக்கவும், சந்தை வாயிலாக நிராகரிக்கவும் பூவுலகின் ஆதாரங்களை ஒட்டுண்ணியாக உறிஞ்சவும் விரும்புகிறது. இத்தகைய குணம் அல்லது முறைமை பாபாசாகேப் அம்பேத்கருக்கு வெறுப்புக்குரியதாக இருக்குமென்பதைக் கணிக்க பேரறிவு ஒன்றும் தேவைப்படாது.
தமிழில்: 
கி. ரமேஷ்(Mainstream ஆங்கில இதழ் ஏப்ரல் 14,2012-ல்வெளியானது.)